ஐ.டி. ஊழியர் ஜிகிஷா கொலை வழக்கில் 2 பேருக்கு தூக்கு

டெல்லியில் கடந்த 2009-ம் ஆண்டு ஐ.டி. பெண் ஊழியர் ஜிகிஷா கோஷ் கொல்லப்பட்ட வழக்கில் 2 பேருக்கு தூக்கு தண்டனையும், ஒருவருக்கு ஆயுளும் விதித்துள்ளது டெல்லி நீதிமன்றம்.

அதன்படி குற்றவாளிகள் ரவிகபூர், அமித் சுக்லாவுக்கு மரண தண்டனையும், பல்ஜீத் மாலிக்குக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

28 வயதான ஜிகிஷா கோஷ், தனியார் நிறுவனம் ஒன்றில் ஐ.டி. ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2009, மார்ச் 18-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு, தெற்கு டெல்லி, வசந்த் விஹார் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு அருகில் அலுவலக காரில் இருந்து இறங்கினார்.

அதன் பிறகு கடத்தப்பட்ட அவர் கொல்லப்பட்டார். அவரது உடல் 3 நாட்களுக்குப் பிறகு ஹரியாணா மாநிலத்தின் சூரஜ்குண்ட் அருகே புதரில் இருந்து மீட்கப்பட்டது.

இந்த வழக்கில் ரவி கபூர், அமித் சுக்லா, பல்ஜித் சிங் மாலிக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

2009, ஜூனில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை 2010 ஏப்ரலில் தொடங்கியது. இறுதி வாதம் கடந்த ஜூலை 5-ம் தேதி முடிந்தது.

மேற்கண்ட மூவரும் குற்றவாளிகள் என டெல்லி நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில், குற்றவாளிகளுக்கு தண்டனை இன்று (திங்கள்கிழமை) அறிவிக்கப்பட்டது. ரவிகபூர், அமித் சுக்லாவுக்கு மரண தண்டனையும், பல்ஜீத் மாலிக்குக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>