ஐ.ஐ.டி.க்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

ஒரு வாரத்திற்குள் ஐ.ஐ.டி. மெட்ராஸ் வளாகத்தில் உள்ள அனைத்து பிளாஸ்டிக் குப்பைகளையும் அகற்ற வேண்டும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து ஒரு வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். பாதுகாப்பு குறைவால் இனி ஒரு மான் இறந்தால் கூட ஐ.ஐ.டி. நிர்வாகத்தின் மீது polluters pay principle-ந் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
. அடுத்தகட்ட விசாரணை நவ.13 ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு.iitdeer jakkamma

சென்னையில் அமைந்துள்ள ஐ.ஐ.டி வளாகத்தில், கலைமான்கள், புள்ளிமான்கள், குள்ள நரிகள், காட்டுப் பூனைகள் உள்ளிட்ட பல அரிய வகை உயிரினங்கள் உள்ளன. அங்கு உள்ளவர்களால் உருவாக்கப்படும் குப்பைகளாலும் அங்கு நடத்தப்படும் நிகழ்ச்சிகளாலும் வன உயிரினங்கள் பல இறந்துள்ளன. குறிப்பாக, 220 மான்கள் இறந்துள்ளதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டம்மூலம் தெரியவந்து, பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியது. இதையடுத்து, வன விலங்கு ஆர்வலர் கிளமென்ட் ரூபின், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>