ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கு முதல் நிலை தேர்வில் சென்னையில் செய்தவர்களில் 55 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கு முதல் நிலை தேர்வில் சென்னையில் செய்தவர்களில் 55 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கு முதல் நிலை தேர்வில் சென்னையில் செய்தவர்களில் 55 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை.

சென்னை,

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட 24 வகையான பதவிகளுக்கு முதல்நிலை தேர்வு நேற்று நாடு முழுவதும் நடத்தப்பட்டது. சென்னையில் இந்த தேர்வுக்கு விண்ணப்பம் செய்தவர்களில் 55 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ்., உள்ளிட்ட 24 வகையான, அகில இந்திய பணிகளுக்கு சிவில் சர்வீசஸ் தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் நடத்துகிறது. இந்த நிலையில், நடப்பாண்டிற்கான தேர்வு குறித்து கடந்த மே மாதம் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது. மொத்தம் 1079 பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டன. இதில், 34 இடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பை தொடர்ந்து, நாடு முழுவதும் ஏராளமானோர் விண்ணப்பம் செய்தனர்.

இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு முதல் நிலை எழுத்து தேர்வுக்கான ‘ஹால் டிக்கெட்டுகள்’ அனுப்பி வைக்கப்பட்டன. இதன்படி, முதல் நிலை எழுத்து தேர்வு நாடு முழுவதும் நேற்று நடந்தது.

தமிழகத்தை பொருத்தவரை சென்னை, வேலூர், கோவை, திருச்சி, மதுரை ஆகிய ஊர்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. சென்னையில் 94 மையங்களில் இந்த முதல் நிலை தேர்வு நடந்தது. காலை 9.30 மணியில் இருந்து 11.30 மணி வரையிலும், மதியம் 2.30 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரையிலும் 2 கட்டமாக இந்த தேர்வு நடத்தப்பட்டது.

காலையில் நடந்த தேர்வில் 200 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. மாலையில் நடந்த தேர்வில் 80 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு கேள்விக்கும் தலா 2½ மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆக காலையிலும், மாலையிலும் மொத்தம் 400 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது.

இந்த தேர்வில் ஆர்வத்துடன் பலர் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். இந்தியாவிலும், பிற நாடுகளிலும் அண்மை காலங்களில் நடந்த நிகழ்வுகள் குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. மத்திய அரசின் தங்க நகை டெபாசிட் திட்டம் எதற்காக கொண்டு வரப்பட்டது? என்ற கேள்வியும் அதில் இடம் பெற்றிருந்தது.

இந்த தேர்வில் கலந்து கொண்டவர்களிடம் தேர்வு குறித்து கேட்டபோது, ‘பெரும்பான்மையான கேள்விகள் கடினமாக இருந்தது. கேள்விகளுக்கு சரியான விடையை தேர்வு செய்ய 2 மணி நேரம் போதவில்லை’ என்று கூறினார்கள்.

அதேநேரம், இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் பலர் தேர்வு எழுத நேற்று வரவில்லை. சென்னையில் மட்டும் சுமார் 35 ஆயிரம் பேருக்கு ‘ஹால்டிக்கெட்’ அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், காலையில் நடந்த தேர்வில் 15 ஆயிரத்து 959 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். மதியம் நடந்த தேர்வில், 15 ஆயிரத்து 936 பேர் மட்டுமே கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். காலையில் நடந்த தேர்வில் கலந்து கொண்ட 23 பேர், மதியம் நடந்த தேர்வில் கலந்து கொள்ளவில்லை. சென்னையில் மொத்த விண்ணப்பதாரர்களில் சுமார் 55 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை என்று அதிகாரிகள் கூறினார்கள்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>