ஐஸ்வர்யா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் : திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.

ஐஸ்வர்யா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் : திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது

போதையில் கார் ஓட்டியதில் ஒருவர் பலியான வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி தொழிலதிபர் மகள் ஐஸ்வர்யா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது. மது போதையில் கார் ஓட்டியதாக கைது செய்யப்பட்ட தொழிலதிபரின் மகள் ஐஸ்வர்யா தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

                              சென்னை

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

போதையில் கார் ஓட்டியதில் ஒருவர் பலியான வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி தொழிலதிபர் மகள் ஐஸ்வர்யா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.மது போதையில் கார் ஓட்டியதாக கைது செய்யப்பட்ட தொழிலதிபரின் மகள் ஐஸ்வர்யா தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது இதையடுத்து,அவர் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 1ம் தேதி நானும் எனது நண்பர்களும் இரவு சினிமாவிற்கு சென்று விட்டு பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் நண்பரை கூட்டி வர காரில் சென்றோம். அப்போது, சாலையை கடக்க முயன்ற முனிசாமி என்பவர் மீது எனது கார் மோதி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று கூறப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு சுற்றுக் காவலில் இருந்த போலீசார் என்னை பிடித்து விசாரித்தனர். பின்னர் கிண்டி போக்குவரத்து போலீசார் என் மீது வழக்கு பதிவு செய்து, கடந்த 2ம் தேதி கைது செய்தனர்.

பின்னர் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டேன். என் மீது மது குடித்து விட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது. கவனக்குறைவாக விபத்து ஏற்படுத்தியது உள்ளிட்ட சட்ட பிரிவில் வழக்கு தொடர்ந்தனர்.

என் மீதான குற்றச்சாட்டுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இன்னும் எனக்கு திருமணம் ஆகவில்லை. மேலும் பல்வேறு போட்டியில் பங்குபெற்று பரிசுகள் பெற்றுள்ளேன். எனவே, எனக்கு இந்த வழக்கில் ஜாமீன் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி வைத்தியநாதன் முன்னிலையில் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>