ஐஸ்ஐஎஸ்- உடன் தொடர்புள்ளதாக மேலும் 4 பேரிடம் என்.ஐ.ஏ விசாரணை நடத்துகிறது

2016-08-10-12-16-53m

கோவை: கோவையில் ஐஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் மேலும் 4 பேரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்துள்ளனர். கேரளாவில் பிடிப்பட்ட கோவை உக்கடத்தை சேர்ந்த அபு பஷீர் அளித்த தகவலில் பெயரில் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணையை விரிவுப்படுத்தி உள்ளனர். ஐஸ்ஐஎஸ் ஆதரவாளர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் கோவை உக்கடத்தை சேர்ந்த 10-பேர் ஏற்கனவே விசாரிக்கப்பட்டு வருகின்றனர் மேலும் நான்கு பேர் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டனர்.

நான்கு பேரிடமும் தனி தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தென்தமிழகத்தில் ஐஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு உடையவர்களை பிடிப்பது கவலை அளிப்பதாக ராமநாதபுரம் மாவட்ட கமுதியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார். இந்த நிலையில் கேரளாவில் கைது செய்யப்பட்ட கோவை சேர்ந்த அபு பஷீரின் லேப்டாப்பில் உள்ள உருது மொழி பதிவுகளை மொழிபெயர்ப்பு பணிகள் தொடங்கிவுள்ளது. இதற்காக உருது மொழி தெரிந்த என்.ஐ.ஏ அதிகாரிகள் கோவை வந்துள்ளனர். இதனை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

ஐஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு இருப்பது உறுதி செய்தால் மட்டுமே விசாரணை வளையத்தில் உள்ள 14 பெரும் கைது செய்யப்படுவார்கள் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். கோவையை சேர்ந்த இளைஞர் ஒருவர் சிரியாவில் ஐஸ்ஐஎஸ் இயக்கத்தில் பணி புரிவதாக தகவல் தெரியவந்துள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>