ஐரோம் ஷர்மிளா உண்ணாவிரத போராட்டத்தை முடிக்க மணிப்பூரில் எதிர்ப்பு

ஐரோம் ஷர்மிளா உண்ணாவிரத போராட்டத்தை முடிக்க மணிப்பூரில் எதிர்ப்பு

ஐரோம் ஷர்மிளா உண்ணாவிரத போராட்டத்தை முடிக்க மணிப்பூரில் எதிர்ப்பு

மணிப்பூர்: உண்ணாவிரத போராட்டத்தை முடித்து கொண்டு அரசியலில் சேர தீர்மானத்துள்ள ஐரோம் ஷர்மிளாவுக்கு மணிப்பூரில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 16 ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் ஐரோம் ஷர்மிளா வரும் 9-ம் தேதியோடு போராட்டத்தை கைவிடுவதாக கூறினார். சட்டப்பேரவை தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட போவதாகவும், திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் அவர் கடந்த 26-ம் தேதி அறிவித்தார்.

அவரது இந்த அறிவிப்புக்கு பரவலாக வரவேற்பு காணப்பட்டது. பிரிட்டனை சேர்ந்தவரை ஐரோம் ஷர்மிளா திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஷர்மிளா அரசியலில் சேரவும், மணிப்பூரை சேராத ஒருவரை திருமணம் செய்து கொள்ளவும், மணிப்பூர் தீவிரவாத குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஐரோம் ஷர்மிளா உண்ணாவிரதத்தை தொடரை வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர்கள் அரசியலில் சேர்ந்த புரட்சியாளர்கள் பலர் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளனர். மணிப்பூரை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்பதே அந்த தீவிரவாத குழுக்களின் நோக்கமாகும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>