ஏ.என்.32 ரக விமானம் மாயமாவது இது மூன்றாவது முறை : இந்தியாவில் மட்டும் 125 விமானங்கள்

ஏ.என்.32 ரக விமானம் மாயமாவது இது மூன்றாவது முறை : இந்தியாவில் மட்டும் 125 விமானங்கள்

ஏ.என்.32 ரக விமானம் மாயமாவது இது மூன்றாவது முறை : இந்தியாவில் மட்டும் 125 விமானங்கள்

சென்னை: இந்தியாவில் ஏ.என்.32 ரக விமானம் மாயமாவது இது மூன்றாவது முறையாகும். கடந்த 1986-ம் ஆண்டு முதன் முதலில் இந்தியாவில் இந்த ரக விமானம் மாயமானது. 7 பேருடன் இந்திய பெருங்கடல் பகுதியில் மாயமான அந்த விமானம் என்னவானது என்று இதுவரை தெரியவில்லை. இதை தொடர்ந்து கடந்த 2009-ம் ஆண்டு அருணாச்சலபிரதேசத்தில் 13 பேருடன் ஏ.என்.32 ரக விமானம் ஒன்று நடுவானில் மாயமானது. தேடுதல் வேட்டையில் அது சீன எல்லையோரம் மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது தெரிய வந்துள்ளது.

அதன் பிறகு தற்போதும் மாயமாகியுள்ளது. ரஷ்ய தயாரிப்பான ஏ.என்.32 ரக விமானம் அதிநவீன தொழில்நுட்பம் கொண்டது. 23.78 மீட்டர் நீளமும், 8.75 மீட்டர் உயரமும் மற்றும் 16,800 கி.மீ. எடை கொண்ட இவ்வகை விமானங்கள் வெப்பம் நிறைந்த சூழலிலும் அதிக உயரத்திலும் இலகுவாக பறக்க கூடியவை. எரிபொருள் நிரப்பினால் இடைவெளியின்றி 4 மணி நேரம் வரை பறக்ககூடிய திறனும் அவற்றுக்கு உண்டு.

போர் காலங்களிலும் விமானப்படைக்கு உறுதுணையாக செயல்பட கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டவை ஏ.என்.32 ரக விமானங்கள். ராணுவத்தில் மட்டுமின்றி வணிக பயன்பாட்டிலும் இடம் பெற்றுள்ளன. இதுவரை தயாரிக்கப்பட்ட 372 விமானங்கள் உலகின் பல்வேறு நாட்டு விமானப்படையில் இடம் பெற்றுள்ளன. இதில் அதிகளவாக 125 விமானங்களை வாங்கியுள்ளது இந்திய விமானப்படை.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>