ஏ.ஆர்.ரகுமானுக்கு ‘தமிழ் ரத்னா விருது

ஐ.நா.வில்எம்.எஸ். சுப்புலட்சுமியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இன்னிசை கச்சேரி நடந்தது.

ஐ.நா.வில்எம்.எஸ். சுப்புலட்சுமியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இன்னிசை கச்சேரி நடந்தது.

நியூயார்க்

இந்தியாவின் 70-வது சுதந்திரதினத்தையொட்டி ஐ.நா.வில் உள்ள இந்தியாவின் நிரந்தர தூதரகம் சார்பில் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. பொதுச்சபை அரங்கில் ஆஸ்கார் விருது பெற்ற பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இன்னிசை கச்சேரி நடந்தது. .

இதில், 50 ஆண்டுகளுக்கு முன்பாக ஐ.நா. சபையால் அழைக்கப்பட்டு கர்நாடக இசை கச்சேரி நடத்திய முதல் இந்திய பெண் என்ற பெருமையைப் பெற்ற எம்.எஸ். சுப்புலட்சுமியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவும் கொண்டாடப்பட்டது.

ஏ.ஆர். ரகுமான் கச்சேரிக்காக மேடை ஏறியபோது பார்வையாளர்கள் வரிசையில் இருந்த பல்வேறு நாடுகளின் தூதரக அதிகாரிகள், இந்திய அமெரிக்கர்கள் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர். இதைத்தொடர்ந்து சுமார் 3 மணி நேரம் தனது இசைக்குழுவினருடன் கச்சேரி நடத்திய அவர் இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக தனது ‘ஜெய் ஹோ‘ பாடல், சுபி பாடல்கள் மற்றும் எம்.எஸ். சுப்புலட்சுமியின் பாடல்களுக்கு இசையமைத்தார். ஏ.ஆர்.ரகுமானின் 2 சகோதரிகளும், பிரபல பாடகர் ஜாவித் அலியுடன் இணைந்து பாடினர். ‘டிரம்ஸ்‘ சிவமணி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டிரம்ஸ் வாசித்தார்.

இந்த இசை நிகழ்ச்சி முடிந்த பிறகு அமெரிக்க தமிழ் சங்க தலைவர் பிரகாஷ் சுவாமி கூறுகையில்,

கர்நாடக இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமி, ஐ.நா வில் நடத்திய இசை நிகழ்ச்சி தமிழர்களுக்கு வரலாற்று நிகழ்வு. அவரை கவுரவிக்கும் வகையில் ஏர்.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி அமைந்துள்ளது என கூறினார்.

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானுக்கு ‘தமிழ் ரத்னா விருது’ வழங்கி அமெரிக்க தமிழ் சங்கம் கவுரவித்தது.இயக்குனர் பாரதிராஜா; பரத நாட்டியம் கலைஞர் கமலா லக்ஷ்மன்; ஸ்ரீநிவாச வரதன், கணிதம் ஏபெல் பரிசு வென்றவர்; கனடிய சட்டமன்ற உறுப்பினர் பிரசாத் சீனிவாசன், மற்றும் இதய அறுவை சிகிச்சை வளவனூர் சுப்ரமணியம், ஆகியோருக்கு முன்னதாக தமிழ் ரத்னா விருது வழங்கபட்டு உள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>