ஏ.ஆர். முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் – தமிழக அரசு

அரசின் நலத்திட்டங்களை விமர்சித்த இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் வலியுறுத்தபட்டுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான சர்க்கார் திரைப்படத்தில் தமிழக அரசையும், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச திட்டங்களையும் கடுமையாக விமர்சிக்கும் காட்சிகள் இருப்பதாகவும், அதை நீக்க கோரி தமிழகத்தில் பல திரையரங்குகள் முன்பு அதிமுக- வினர் போராட்டம் நடத்தினர்.
vjay
இந்த வழக்கில், தன்னை காவல்துறை எந்நேரமும் கைது செய்ய கூடும் என்பதால் முன் ஜாமீன் கோரி நவம்பர் 9ஆம் தேதி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், நவம்பர் 27ஆம் தேதி வரை ஏ.ஆர்.முருகாதாஸை கைது செய்ய கூடாது என இடைக்கால உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி, சர்கார் படத்தில் அரசு திட்டங்களை விமர்சித்ததற்காக முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் அவர் எடுக்கும் படங்களில் அரசின் திட்டங்களையும், அரசையும் விமர்சிக்கும் வகையில் காட்சிகள் அமைக்க மாட்டேன் என்று உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அரசு தரப்பில் கோரிக்கை வைத்தார்.

இதுதொடர்பாக, முருகாதாஸிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டுமென அவரது வழக்கறிஞர் தெரிவித்ததையடுத்து வழக்கு நாளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>