ஏழைகளுக்கு திருமண நிகழ்ச்சிகளை நடத்த அம்மா திருமண மண்டபம் கட்டப்படும் – தமிழக முதல்வர் ஜெ ஜெயலலிதா-அறிவிப்பு

201604210958490480_salem-election-campaign-meeting-two-death-jayalalithaa_secvpf

சென்னை: ஏழைகள் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்த அம்மா திருமண மண்டபம் கட்டப்படும் என்று முதலமைச்சர் ஜெயலிலதா அறிவித்துள்ளார். 11 இடங்களில் ரூ.83 கோடியில் அம்மா மண்டபம் கட்டப்படும் என அறிவித்துள்ளார். அம்மா திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகளை நடத்த இனையதளத்தில் முன்பதி செய்ய வேண்டும். சேலம், அம்பாசமுத்திரம், மதுரை, அண்ணாநகர், உடுமலைபேட்டை, தண்டையார்பேட்டை, அயப்பாக்கம், வேளச்சேரி, கொரட்டூர், பருத்திப்பட்டு, பெரியார் நகர் ஆகிய இடங்களில் அம்மா திருமண மண்டபம் கட்டப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மேலும் குடிசைப்பகுதி மாற்று வாரியம் மூலம் ரூ.1,800 கோடியில் 50,000 வீடுகள் கட்டப்படும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 45,000 வீடுகளுக்கு ரூ.945 கோடி மானியம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

வீட்டுவசதி வாரியம் மூலம் சோழிங்கநல்லூரில் 2,000 வீடுகள் ரூ.600 கோடியில் கட்டப்படும் என்றும், சுயநிதி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் 873 வீடுகள் கட்டப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். திருவள்ளூர், காஞ்சி, வேலூர், கிருஷ்ணகிரி, மதுரை, நெல்லை, தஞ்சாவூர் கட்டப்படும் என்று அறிவித்துள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>