ஏமாற்று விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு 5 ஆண்டுகள் சிறைதண்டனை: மத்திய அரசு

 ஏமாற்று விளம்பரங்கள் நடிப்பதன் மூலம் முதன்முறை தவறு செய்யும் பிரபலங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதமும், 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.  2-வது முறை தவறு செய்யும் பட்சத்தில் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.

ஏமாற்று விளம்பரங்கள் நடிப்பதன் மூலம் முதன்முறை தவறு செய்யும் பிரபலங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதமும், 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும். 2-வது முறை தவறு செய்யும் பட்சத்தில் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.

புதுடெல்லி: ஏமாற்று விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு 5 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டதிருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நுகர்வோர் பாதுகாப்பு மசோதா மீது நாடாளுமன்ற நிலைக்குழு தமது சிபாரிசுகளை அளித்துள்ளது. அதனை ஏற்று மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் ஒரு வரைவு மசோதாவை உருவாக்கியுள்ளது.

அதில் ஏமாற்று விளம்பரங்களை கட்டுப்படுத்தவும், அவற்றில் நடிக்கும் பிரபலங்களுக்கு பொறுப்புணர்வை உண்டாக்கும் வகையிலும் கடுமையான சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி ஏமாற்று விளம்பரங்கள் நடிப்பதன் மூலம் முதன்முறை தவறு செய்யும் பிரபலங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதமும், 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2-வது முறை தவறு செய்யும் பட்சத்தில் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கலப்படம் செய்பவர்களுக்கும் இதே அளவிலான சிறை மற்றும் அபராதத்துடன் உரிமமும் ரத்து செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த வரைவு மசோதா மீது மத்திய அமைச்சர்கள் குழு இன்று ஆலோசனை நடத்துகிறது

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>