ஏமனில் விமான தாக்குதலில் 140 பேர் பலி: ஐ.நா., தகவல்

ஏமனில் நடந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சியின் போது, விமானப்படை தாக்குதலில் 140 பேர் கொல்லப்பட்டனர். 525 பேர் காயமடைந்துள்ளனர் என ஐ.நா.

ஏமனில் நடந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சியின் போது, விமானப்படை தாக்குதலில் 140 பேர் கொல்லப்பட்டனர். 525 பேர் காயமடைந்துள்ளனர் என ஐ.நா.

சனா: ஏமனில் நடந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சியின் போது, விமானப்படை தாக்குதலில் 140 பேர் கொல்லப்பட்டனர். 525 பேர் காயமடைந்துள்ளனர் என ஐ.நா., அதிகாரி ஒருவர் கூறியுள்ளனர். இதற்கு சவுதி தலைமையிலான கூட்டு ராணுவத்தினரின் தாக்குதலே காரணம் என புரட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விமானப்படை தாக்குதலில் பொது மக்கள் பலியாவதை தொடர்ந்து இந்த கூட்டுப்படைக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த தாக்குதலுக்கு இந்த படைமறுப்பு தெரிவிக்கவில்லை.

ஏமன் சுகாதாரத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறுகையில், தாக்குதலில் பலி அதிகமாக உள்ளது. 520க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டவர்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர் என்றார்.

சனாவில், பொது மக்கள் கூடியுள்ள அரங்கு மீது தாக்குதல் நடத்தப்பட்டது, தொண்டு நிறுவன ஊழியர்களுக்கு அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உடனடி விசாரணை நடத்த வேண்டும்.

பொது மக்கள் பாதுகாப்பு குறித்து சர்வதேச நாடுகள் அழுத்தம் தர வேண்டும். ஏமனில் பொது மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என ஐ.நா., அதிகாரி ஒருவர் கூறினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>