எஸ் 400 ஏவுகணை வாங்கும் விவகாரம்-இந்தியா- ரஷியா இடையே ஒப்பந்தம்

தலைநகர் டெல்லியில் நடைபெறும் இந்தியா, ரஷ்யா 19வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக 2 நாள் அரசு முறை ✈பயணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வந்துள்ளார். நேற்று டெல்லி வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் அதிகாரிகள் டெல்லி ✈விமான நிலையத்தில் நேரில் வரவேற்றனர். டெல்லி வந்த ரஷ்ய அதிபர் புதின் இன்று ஐதராபாத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். modi-putin_jakkammaஅப்போது இந்தியா, ரஷ்யா இடையே பல ஒப்பந்தங்கள் ✍கையெழுத்தானது. அப்போது ரூ.36,000 கோடி மதிப்பிலான எஸ்-400 ஏவுகணைகள் வாங்கும் ஓப்பந்தம் இருநாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் ✍கையெழுத்தானது. இந்த ஏவுகணைகள் 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 300 இலக்குகளை அடையாளம் காணும், ஒரே நேரத்தில் 36 இடங்களில் தாக்குதல் நடத்தும் வலிமை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>