எஸ்.ஏ.சந்திரசேகருக்கு முன்ஜாமீன்

மத உணர்வுகளை புண்படுத்தியது தொடர்பான வழக்கில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சென்னை செசன்ஸ் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது..

கடந்த நவம்பர் மாதத்தில் சென்னையில் நடைபெற்ற பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், மக்கள் திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்துவதை கடவுளுக்கு லஞ்சம் கொடுப்பது என விமர்சித்தார். இது இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் இருப்பதாக இந்து முன்னணி அமைப்பின் சார்பில் வழக்கு உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. sa-chandrasekar
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மனுதாரரின் புகாரில் முகாந்திரம் இருந்தால் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.இதையடுத்து இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் மீது மத உணர்வு புண்படுத்தியாக கூறி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதையடுத்து சந்திரசேகர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தா மனு தாக்கல் செய்திருந்தார் இந்த மனு விசாரணைக்கு வந்தது .அப்போது மனுவை விசாரித்த நீதிபதி இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>