எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக நிறுவனர் பச்சமுத்து:இன்று எந்நேரமும் கைது செய்யப்படலாம்?

 எஸ்.ஆர்.எம் கல்விக்குழும நிறுவனர் பச்சமுத்துவிடம் நேற்று இரவு முதல் விடிய விடிய தீவிர விசாரனை தற்போதுவரை நடைபெற்று வருகிறது.  மேலும் இந்த விசாரணைக்கு ஒத்துழைக்காத பட்சத்தில் இன்று  எந்நேரமும் கைது செய்யப்படலாம்

எஸ்.ஆர்.எம் கல்விக்குழும நிறுவனர் பச்சமுத்துவிடம் நேற்று இரவு முதல் விடிய விடிய தீவிர விசாரனை தற்போதுவரை நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த விசாரணைக்கு ஒத்துழைக்காத பட்சத்தில் இன்று எந்நேரமும் கைது செய்யப்படலாம்

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக நிறுவனர் பச்சமுத்துவிடம் விடிய, விடிய மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை.

வேந்தர் மூவிஸ் நிறுவன உரிமையாளர் மதன் கடந்த மே மாதம் 27ம் தேதி ஐந்து பக்கம் கொண்ட கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு மாயமானார்.
மாயமான மதனை கண்டுபிடித்து தரக்கோரி மதனின் தாயார் தங்கம் ஆட்கொணர்வு மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதைத் தொடர்ந்து மதனை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

வேந்தர் மூவிஸ் மதன் எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் சேர மாணவர்களிடம் பணம் பெற்றது குறித்து கடிதம் ஒன்றையும் அவர் வெளியிட்டார்.
அக்கடிதத்தில் மாணவர்களின் பணத்தை எஸ்.ஆர்.எம். கல்லூரி நிர்வாகிகளிடம் கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
மதன் மாயமானதால் மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் பச்சமுத்து வின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மேலும் மருத்துவக் கல்லூரி சீட்டுகளை விற்ற வழக்கில் எஸ்.ஆர்.எம் கல்விக்குழும நிறுவனர் பச்சமுத்துவிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை என்று காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில் பச்சமுத்துவை விசாரிப்பதிலும், கைது செய்யவதிலும் எந்த ஒரு தயக்கமும் இல்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறினார்.

இந்த நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவு பேரில் பச்சமுத்து, மகன் ரவி பச்சமுத்து, தனியார் தொலைக்காட்சி நிறுவனர் சத்திய நாராயணன் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஐ.ஜே.கே கட்சியின் செயலாளர் சண்முகத்திடம் எழும்பூர் மத்திய குற்றவியல் துணை ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று 7மணியளவில் விசாரணையை எழும்பூரில் உள்ள அலுவலகத்தில் தொடஙகினர். சில மணிநேர விசாரணைக்கு பின் மற்றவர்கள் அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், எஸ்.ஆர்.எம் கல்விக்குழும நிறுவனர் பச்சமுத்துவிடம் நேற்று இரவு முதல் விடிய விடிய தீவிர விசாரனை தற்போதுவரை நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த விசாரணைக்கு ஒத்துழைக்காத பட்சத்தில் இன்று எந்நேரமும் கைது செய்யப்படலாம் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பச்சமுத்துவை சந்திக்க வந்த இயக்குனர் டி.ராஜேந்தர் க்கு போலீசார் அனுமதி மறுப்பு.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>