எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக நிறுவனர் பச்சமுத்து நிலம்மற்றும்பணம் மோசடிசெய்துள்ளதாக புகார்.

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக நிறுவனர் பச்சமுத்து நிலம்மற்றும்பணம்  மோசடிசெய்துள்ளதாக  புகார்.

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக நிறுவனர் பச்சமுத்து நிலம்மற்றும்பணம் மோசடிசெய்துள்ளதாக புகார்.

பச்சைமுத்து மகன் ரவி பச்சமுத்து நிலமோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் காவல் ஆணையர் அலுவலத்தில் நில உரிமையாளர்கள் புகார்.

சென்னை கோயம்பேடு மாநகராட்சி பேருந்து நிலையம் அருகே எஸ்.ஆர்.எம். பேருந்து நிறுத்தம் உள்ளது. அதன் பின்புறம் ஆறுபேருக்கு சொந்தமான சுமார் எட்டு கிரவுண்டு நிலம் உள்ளதாக குறப்படுகிறது, இதனை கடந்த ஆண்டு 13.11.2015 அன்று கூலிப்படை உதவியுடன் போலிபட்டா தயாரித்து ரவி பச்சமுத்து அவருடை அடியாட்களுடன் சேர்ந்து அபகரித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட டெய்சி, மாதவராவ், சீனிவாச ராவ், ராஜா, மகேஷ் ராஜா, கணேஷ் ராஜா ஆகியேர் நிலத்தை மீட்டு தரக்கேட்டும் ரவி பச்சமுத்து மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதுவரை 17 முறை பகார் கொடுக்கபட்டதாகவும் இதுவரை ஒரு புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலத்தில் புகார் மனு கொடுத்ததோடு நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரவி உள்ளிட்ட அவர் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் மீது உடனே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் படி உத்தரவு பிறப்பித்தது ஆனால் கோயம்பேடு காவல் ஆய்வாளர் ரவி பச்சமுத்துவின் பெயரை விட்டு விட்டு அலுவலக ஊழியர்கள் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்துள்ளார் எனவும், பாதிக்கப்பட்டவர்கள் நடவடிக்கை கேட்டு மீண்டும் இன்று பாதிக்கப்பட்டவர்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
புகாரின் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புவதாக பாதிக்கபட்டோர் தெரிவித்தனர்.


சென்னை சேர்ந்த திரைப்பட பைனான்சியர் போத்ரா, பச்சமுத்துவும் அவரது ஆதரவாளர்களும் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். பின் செய்தியாளர்களை சந்தித்த போத்ரா ,

தங்கள் நிதி நிறுவனம் மூலம் பச்சமுத்து முன்னிலையில், மதன் “மொட்ட சிவா, கெட்ட சிவா” என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக கோடிக்கணக்கில் பணம் பெற்றதாகக் கூறினார். மூன்று மாதங்களில் வாங்கிய பணத்தை திருப்பி தருவதாக உறுதி பத்திரத்தில் கையெழுத்து யிட்டனர். ஆனால், இதுவரை அந்த பணம் தனக்கு கிடைக்கவில்லை என பைனான்சியர் போத்ரா குற்றம் சாட்டினார். இதனிடையே வேந்தர் மூவிஸ் மதன் ஒரு கோடி ரூபாய்க்கு காசோலை கொடுத்து ள்ளார்.
ஆனால் வங்கியில் பணம் இல்லாமல் காசோலை திரும்ப வந்துவிட்டது. இதனை யடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடர்துள்ளார். மேலும் அவர் மாயமான பின் செக் மோசடி புகார் அளித்ததாகவும், அந்த புகாரைத் திரும்பப்பெற வலியுறுத்தி இரண்டுமுறை போனிலும், ஒரு முறை நேரிலும் பச்சமுத்து ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்து வருவதாகவும் , அதனால் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மதன் வழக்கை விசாரித்து வரும் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணனிடம் மனு அளித்துள்ளதாக அவர் கூறினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>