எல்லை தாண்டிய தீவிரவாதம் குறித்து பேச்சுவார்த்தை : இந்தியாவின் நிபந்தனையை நிராகரித்தது பாகிஸ்தான்

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் படியும், காஷ்மீர் மக்களின் விருப்பங்கள் படியும் ஜம்மு-காஷ்மீர் பிரச்சனைக்கு நேர்மையான தீர்வு காண்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இம்மாத இறுதியில் பாகிஸ்தானுக்கு வரும்படி ஜெய் ஷங்கருக்கு , அய்சாஸ் அகமது சவுத்ரி அழைப்பு விடுத்துள்ளார்.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் படியும், காஷ்மீர் மக்களின் விருப்பங்கள் படியும் ஜம்மு-காஷ்மீர் பிரச்சனைக்கு நேர்மையான தீர்வு காண்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இம்மாத இறுதியில் பாகிஸ்தானுக்கு வரும்படி ஜெய் ஷங்கருக்கு , அய்சாஸ் அகமது சவுத்ரி அழைப்பு விடுத்துள்ளார்.

இஸ்லாமாபாத்: எல்லை தாண்டிய தீவிரவாதம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற இந்தியாவின் நிபந்தனையை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது. இது குறித்து இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் இந்தியா-பாகிஸ்தான் பேச்சு வார்த்தையில் எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை செயலர் ஜெய் ஷங்கர் நிபந்தனை விதித்து இருந்ததாக கூறினார்.

இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் இந்திய தூதர் கெளதம் பம்பவலேயை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலர் அய்சாஸ் அகமது சவுத்ரி நேரில் அழைத்து கடிதம் அளித்துள்ளார். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் படியும், காஷ்மீர் மக்களின் விருப்பங்கள் படியும் ஜம்மு-காஷ்மீர் பிரச்சனைக்கு நேர்மையான தீர்வு காண்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இம்மாத இறுதியில் பாகிஸ்தானுக்கு வரும்படி ஜெய் ஷங்கருக்கு , அய்சாஸ் அகமது சவுத்ரி அழைப்பு விடுத்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் அப்பாவி மக்களுக்கு எதிராக நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு உடனடியாக முடிவு கட்டப்பட வேண்டும், வன்முறையில் காயம் அடைந்தோருக்கு மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும், ஜம்மு-காஷ்மீருக்கு செல்ல பாகிஸ்தான் மருத்துவர்கள், உதவியாளர்களுக்கு இந்தியா அனுமதி அளிக்க வேண்டும் உள்ளிட்ட விவரங்கள் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலர் அளித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே காஷ்மீர் விவகாரம் குறித்து பேச்சு வார்த்தை நடத்த பாகிஸ்தான் விடுத்துள்ள அழைப்பை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் காஷ்மீரில் 42வது நாளாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>