எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் பதிலடி

jakkamma news

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாலாகோட், மாஞ்சாகோட் மற்றும் பீம்பெர் காலி செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி உள்ளது. பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் சரியான பதிலடியை கொடுத்து உள்ளது. கடந்த 12-ம் தேதி குபுவாரா செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இரு இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ஜுலை 9-ம் தேதியும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டது.

கடந்த ஜூன் மாதம் மட்டும் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் 23 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது.

4 பாக். வீரர்கள் உயிரிழப்பு

இதற்கிடையே இந்திய ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 வீரர்கள் உயிரிழந்துவிட்டனர் என பாகிஸ்தான் தெரிவித்து உள்ளது. இந்திய ராணுவ தாக்குதலில் சிக்கிய எங்களது ராணுவ வாகனம் நீலம் ஆற்றில் விழுந்துவிட்டது என கூறிஉள்ளது பாகிஸ்தான். ஒரு ராணுவ வீரரின் சடலம் மீட்கப்பட்டதாகவும், மூன்று ராணுவ வீரரின் சடலத்தை தேடி வருவதாகவும் பாகிஸ்தான் கூறிஉள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>