எரிவாயு சிலிண்டர் மானியம் ரத்து:மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

jawahirullah

எரிவாயு சிலிண்டர் மானியம் ரத்து என மத்திய அரசு அறிவிப்பு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

மத்திய அரசு, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு வழங்கி வரும் மானியத்தை அடுத்த ஆண்டு மார்ச் முதல் ரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கு வழிவகுக்கும் வகையில் ஜீன் 1 முதல் ஒவ்வொரு மாதமும் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.4 உயர்த்தப்பட்டு வருகிறது எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.. மத்திய அரசின் இந்த மக்கள் விரோத திட்டத்தை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

சமையல் எரிவாயு மானியம் உட்பட அனைத்து மானியத்தையும் முழுவதுமாக ஒழிப்பதுதான் மோடி தலைமையிலான பாஜக அரசின் திட்டமாக இருந்துள்ளது. அதற்கான முன்னோட்டமாக சமையல் எரிவாயு மானியத்தை முதலில் ரத்து செய்துள்ளது.

மானிய ரத்து என்ற அறிவிப்பு மோடி தலைமையிலான பாஜக அரசு, மக்கள் மீது அக்கறை அற்ற அரசாகவும், ஏழை, எளிய நடுத்தர மக்களை பற்றி கிஞ்சிற்றும் கவலை அற்ற அரசாகவும் உள்ளது என்பதை பட்டவர்த்தனமாகப் பிரதிபலித்துள்ளது. முற்றிலுமாக சமையல் எரிவாயு மானியம் ரத்துச் செய்யப்படும் போது 18.11 கோடி வீடுகள் பாதிப்படைய உள்ளன. இவற்றில் பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பயனடையும் 2.5 கோடி பெண்களும் அடங்குவர்.

உலக வங்கியும், உலக வர்த்தக நிறுவனத்தின் ஆலோசனைப் படி மானியங்கள் ரத்து, பொது விநியோகக் குறைப்பு என அதிரடியாக இரட்டைத் தாக்குதல்களை ஏழை, எளிய மக்கள் மீது மோடி அரசு தொடுத்து வருகிறது. ஏழை, எளிய நடுத்தர மக்களை வஞ்சிக்கும் மோடி அரசு பெரும் முதலாளிகள் நடத்தும் நிறுவனங்களுக்கு மட்டும் தாரளமாக சலுகைகள் அளித்து வருகின்றது.

மத்திய அரசின் இதுபோன்ற நடவடிக்கையால் அடித்தட்டு ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிப்படைவார்கள். அடித்தட்டு மக்களை நேரடியாக பாதிக்கும் எரிவாயு சிலிண்டருக்கான மானிய ரத்து என்ற அறிவிப்பை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>