என் மகனை போலீசார் திட்டமிட்டு கொன்று விட்டனர் : ராம்குமார் தந்தை குற்றச்சாட்டு

daily_news_75908899308

சென்னை : என் மகனை போலீசார் கங்கணம் கட்டி திட்டமிட்டு கொன்று விட்டனர் என்று ராம்குமாரின் தந்தை பரமசிவன் கூறினார். புழல் சிறையில் ராம்குமார் தற்கொலை செய்துள்ளது பற்றி செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் வசிக்கும் அவரது தந்தை பரமசிவனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது: சுவாதி கொலையில் எனது மகன் நிரபராதி என்று கோர்ட்டில் நிரூபிக்க நாங்கள் முயற்சி செய்து வந்தோம். இன்று சென்னை கோர்ட்டில் அவனை ஜாமீனில் எடுக்க வக்கீல்கள் மூலம் ஏற்பாடு செய்திருந்தோம்.
இந்நிலையில், எனது மகன் ராம்குமாருக்கு சுகர் காரணமாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் புழல் சிறையிலிருந்து ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதாக இன்று (நேற்று) மாலை நாலே முக்கால் மணிக்கு சிறையிலிருந்து போன் செய்தனர். சிறையில் இருப்பவருக்கு சுகவீனம் என்றால் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கும் வழக்கப்படியே இதை தெரிவிப்பதாக சொன்னார்கள்.

தொடக்கத்திலிருந்தே எனது மகனை கொல்ல போலீசார் முயன்றனர். அவரை பிடிக்க வந்தபோது வீட்டுக்கு பின்னால் கொண்டு சென்று பிளேடால் கழுத்தை அறுத்தனர். அதே போல் சிறையிலும் கொல்ல முயற்சி செய்துள்ளனர். என் மகனை கொல்ல போலீசார் கங்கணம் கட்டியிருந்துள்ளனர். சிபிஐ விசாரணை வேண்டும்: சுவாதியை கொன்ற உண்மையான குற்றவாளியை பிடிக்க துப்பில்லாத அவர்கள், இப்போது திட்டமிட்டு என் மகனை கொன்று விட்டு தற்கொலை என்று பொய் சொல்கின்றனர். எனது மகன் சாவுக்கு அரசு கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும். உண்மை தெரியும் வரை நாங்கள் ெசன்ைனக்கு செல்ல மாட்டோம், அவரது உடலை வாங்க மாட்டோம். இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ராம்குமார் இறந்த தகவலறிந்ததும் அவரது தாய் புஷ்பம் மற்றும் சகோதரிகள் இருவரும் அழுதுபுரண்டனர். மீனாட்சிபுரத்திலுள்ள அவர் வீட்டு முன்பு உறவினர்கள் அதிர்ச்சியில் திரண்டுள்ளனர்.

சிறைத்துறைதான் முழு பொறுப்பு

ராம்குமார் வக்கீல் ராம்ராஜ் அளித்த பேட்டி: தற்கொலை செய்யும் அளவுக்கு ராம்குமார் கோழை அல்ல. அவரிடம் நான் நேற்று கூட ஒரு மணி நேரம் பேசினேன். அப்போது அவர் தெளிவான மனநிலையில் தான் இருந்தார். எனவே இது தற்கொலை அல்ல கொலை. சிறையில் உள்ள அவர் போலீஸ் பாதுகாப்பில் இருக்கிறார். தற்கொலை செய்து கொள்ளும் காரணம் எதுவும் இல்லாதபோது இது அப்பட்டமான கொலை தான். அனைவரும் சேர்ந்து ராம்குமாரை கொலை செய்துவிட்டனர். இதற்கு சிறைத்துறை தான் முழு பொறுப்பு என்றார். பிரேத பரிசோதனை: ராம்குமாரின் உடல் மாஜிஸ்திரேட் முன்னிலையில் இன்று காலை 11 மணி அளவில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>