என்.எல்.சி.யில் 80 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்பாட்டம்

2016-17-9-13-32-35

நெய்வேலி: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 80 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ஒப்பந்த தொழிலாளர்கள் 700 பேர் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். என்.எல்.சி. முதல் சுரங்க விரிகாக்கத்தில் பணியாற்றிய ஒப்பந்த தொழிலாளர்கள் 80 பேருக்கு வேலைநாட்களை நிர்வாகம் குறைத்துள்ளது. இதனால் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை நிர்வாகம் பணி நீக்கம் செய்தது.
இதை கண்டித்து ஒப்பந்த தொழிலாளர்கள் 700 பேர் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து வாயில் முன்பு கூடி ஆர்பாட்டம் நடத்தினர். பணிநீக்கம் செய்யப்பட்ட 80 தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பணி வழங்க என்.எல்.சி. நிர்வாகம் மறுத்தால் போராட்டத்தை தீவிரப்படுத்த போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>