என்னை நம்பி பொண்ணு கொடுக்கலாம்:மு.திலிப்

01-1498884405-daddy-village-cookingstyle2

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மரக்குளம் உள்ள சின்னஉடப்பங்குளம் கிராமம். இக்கிராம மக்கள் கடந்த 100 ஆண்டுகளாக சமையல் வேலையை, குலத்தொழிலாக செய்து வருகின்றனர். ‘ஏமி குழம்பு…’: கைப்பக்குவம், சுவை இவர்களது ஸ்பெஷாலிட்டி. ராமநாதபுரம் மாவட்டத்தில் எந்த விசேஷமாக இருந்தாலும், ‘‘ஏப்பா… அந்த சின்னஉடப்பங்குளம் கிராமத்துல போய் சமையல்காரரை கூட்டி வா…’’ என்பார்களாம். தென்மாவட்டங்களிலும் இவர்கள் சமையல் பிரபலம்… லோக்கல் மேட்டரை விடுங்க… ஆந்திர மாநிலத்தில் நடக்கும் விசேஷத்திற்கு கூட, இங்கிருந்து சென்று சமைக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

ஆண்கள் ஸ்பெஷல்: இதுல இன்னொரு ஸ்பெஷல் என்னான்னா, சமையல் வேலைகளில் முழுக்க, முழுக்க ஆண்களைத்தான் பயன்படுத்துகின்றனர். எடுபிடி வேலைகளுக்கு கூட பெண்களை பயன்படுத்துவதில்லை. 50 பேராய் இருந்தாலும் சரி… 50 ஆயிரம் பேராக இருந்தாலும் சரி… அற்புதமான சமையலை குறிப்பிட்ட நேரத்தில், சமைத்து கொடுப்பதில் இந்த ஊர் ஆண்கள் கில்லாடிகள்.
கமுதி பகுதியில் 50க்கும் மேற்பட்ட பெரிய, சிறிய அளவிலான சைவ,அசைவ ஓட்டல்கள் உள்ளன. இங்குள்ள பெரும்பாலான மாஸ்டர்கள் சின்ன உடப்பங்குளம் கிராமத்தை சேர்ந்தவர்கள்தான்…!எப்படி வந்தது நளபாகம் : சின்னஉடப்பங்குளம் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும், புரட்டாசி மாதம் ஊர் அம்மனுக்கு திருவிழா நடைபெறும்.

10 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில் மெகா அன்னதானம் வழங்கப்படும். அப்போது 500 பேர் சேர்ந்து ஒவ்வொரு நாளும் சமையல் செய்வார்கள். இந்த சமையல் ஊர் மக்களுக்கு பரிமாறப்படும். இப்படி செய்த கூட்டுச்சமையல் ஆர்வம்தான், நாளடைவில் இவ்வூர் மக்களுக்கு சமையல் ஆர்வத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முன்ளாள் ஊராட்சி தலைவர் பொன்.ஆதி கூறுகையில், ‘‘எனது தந்தை நல்ல சமையல் மாஸ்டர். பள்ளி விடுமுறையில் தந்தைக்கு உதவியாக செல்வேன். அப்படியே ஆர்வம் பற்றிக்கொண்டது. இப்போதும் ஃப்ரீயாக இருக்கிற நாட்களில் சமையல் வேலைக்கு முதல் ஆளாக செல்வேன். படித்தவர், படிக்காதவர் என்ற வித்தியாசம் இல்லாமல் சமையல் வேலையை ஆர்வமாக செய்து வருகிறோம். இது காலங்காலமாக தொடரும்…’’ என்றார்.

இன்ஜினியர் வினோத் கூறுகையில், ‘‘நான் கடந்த ஆண்டு வரை சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில், இன்ஜினியராக மாதம் ₹24 ஆயிரம் சம்பளத்திற்கு பணியாற்றினேன். வேலையில் போதிய ஈடுபாடு இல்லை. எனவே, கமுதி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள ஓட்டலில் மாஸ்டராக பணியாற்றி வருகிறேன். சம்பளத்தை விட வேலையில் திருப்தி கிடைக்கிறது. சைவம், அசைவம் அனைத்தும் எனக்கு அத்துப்படி. என்னை நம்பி பொண்ணு கொடுக்கலாம் (சிரிக்கிறார்). நான் மட்டுமல்ல… இந்த கிராமத்தில் வக்கீல், பட்டதாரிகள் உட்பட எல்லோருமே சமையல் தெரிந்தவர்கள்தான்…’’ என்கிறார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>