என்னை அரசியலுக்கு கொண்டு வந்தவர் இந்திரா காந்தி – மு.க.ஸ்டாலின்

என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தவர் இந்திரா காந்தி – மு.க.ஸ்டாலின்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் (18-11-2017) கோவையில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் அவர்களின் நூற்றாண்டு விழாவில் சிறப்புரை ஆற்றினார்.
MKS@Coimbatore meeting 18.11 (1)
பத்திரிகையாளர்கள் அடிக்கடி தலைவர் கலைஞர் அவர்களிடத்தில் ஒரு கேள்வியைக் கேட்பதுண்டு. “உங்களுடைய மகனாக இருக்கும் ஸ்டாலினை அரசியலில் கொண்டுவர நீங்கள் முயMKS@Coimbatore meeting 18.11 (3)ற்சிக்கிறீர்களா?”, என்றெல்லாம் பலநேரங்களில் விமர்சனம் செய்வதற்காக, கேள்விகளை கேட்க வேண்டும் என்பதற்காக இந்த கேள்வியை அடிக்கடி கேட்பதுண்டு என்று பேசினார்.

அப்படி ஒருமுறை கேட்ட நேரத்தில், தலைவர் கலைஞர் அவர்கள் பத்திரிகையாளர்களிடத்தில் பதில் சொல்லுகிற நேரத்தில் சொன்னார், “என்னுடைய மகன் ஸ்டாலினை நான் அல்ல, அன்னை இந்திரா காந்தி அவர்கள்தான் அரசியலுக்கு முழுமையாக கொண்டு வந்து சேர்த்தார்”, என்று எடுத்துச் சொன்னார். எந்தப் பொருளோடு எடுத்துச் சொன்னார் என்பது உங்களுக்கும் தெரியும், மேடையில் இருக்கும் அத்தனை பேருக்கும் புரியும் என்று கூறினார்.

நான் பள்ளிப் பருவத்தில், அரசியலில் முழுமையாக ஈடுபட வாய்ப்பில்லை என்று சொன்னாலும், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கக்கூடிய வாய்ப்பை, நடத்தக்கூடிய வாய்ப்பை நான் தொடர்ந்து செய்து கொண்டிருந்ததுண்டு. ஆனால், நான் முழுமையாக அரசியலுக்கு வருவதற்கு காரணம், 1975 ஆம் ஆண்டு நாட்டில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட நேரத்தில் , 1976 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி கலைக்கப்பட்டு, 500க்கும் மேற்பட்ட திமுகவினர் மிசா கைதிகளாக கைது செய்யப்பட்டு சிறை கொட்டகைகளில் அடைக்கப்பட்டார்கள். அப்படி அடைக்கப்பட்ட 500 பேர்களில் நானும் ஒருவனாக இருந்தேன் என குறிப்பிட்டார்.

ஓராண்டு காலம் சிறையில் இருந்து வந்த அனுபவத்தில், முழுவதுமாக அரசியலுக்கு வருவதற்கு அதுவொரு உந்து சக்தியாக இருந்தது. அதற்கு அம்மையார் இந்திரா காந்தி அவர்கள் காரணமாக இருந்திருக்கிறார் என்பதை எண்ணிப் பார்க்கின்ற நேரத்தில், உள்ளபடியே அவருடைய நூற்றாண்டு நிறைவு விழா நடைபெறுகிற நேரத்தில் நான் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன், பெருமைப்படுகிறேன் என்று பேசினார்.
MKS@Coimbatore meeting 18.11 (6)
அதேபோல, இன்னொரு பொருத்தம் என்னவென்றால், திராவிட இயக்க நூற்றாண்டு விழாவை நாம் நடத்திக் கொண்டிருக்கும் நேரத்தில், அன்னை இந்திரா அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெறுவது பெருமைக்குரியதாக அமைந்திருக்கிறது. வட துருவத்தில் அன்னை இந்திரா காந்தி அவர்கள் ஒரு மாபெரும் தலைவராக விளங்கினார். அதே நேரத்தில், தென் துருவத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் இன்றைக்கும் அசைக்க முடியாத மாபெரும் சக்தியாக, திராவிட இயக்கத்தின் மூத்த தலைவராக விளங்கிக் கொண்டிருக்கிறார் என்று கூறினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>