எனக்கும், தினகரனுக்கும் எந்தவிதமான கருத்து வேறுபாடும் கிடையாது- திவாகரன்

201707281404028086_For-me-and-for-daily-There-is-no-difference-of-opinion-_SECVPF

அ.தி.மு.க. அம்மா அணி பொதுச்செயலாளர் சசிகலாவின் அண்ணியும், துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரனின் மாமியாருமான சந்தான லட்சுமி சென்னையில் மரணம் அடைந்தார்.

அவரது உடல் தஞ்சை கொண்டு வரப்பட்டது. தஞ்சை மேல வஸ்தாசாவடியில் உள்ள வீட்டில் இருந்து இன்று மதியம் இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது.

மாமியாரின் இறுதி சடங்கில் பங்கேற்க டி.டி.வி. தினகரன் தஞ்சை வந்துள்ளார். அவரிடம் சந்தான லட்சுமி உடலுக்கு அஞ்சலி செலுத்த கட்சிக்காரர்கள் யாரும் வரவில்லையே என்று கேட்ட போது, துக்க வீட்டில் அரசியல் பேச விரும்பவில்லை. ஒரு சிலர் நேரில் வருகிறார்கள்.ஒரு சிலர் பேரின் மூலம் துக்கம் தெரிவிக்கிறார்கள். அமைச்சர்கள் வராதததை அரசியல் ஆக்க வேண்டாம். அ.தி.மு.க.வில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்து இருந்து பாருங்கள் என தெரிவித்தார்.

சந்தான லட்சுமி உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த சசிகலாவின் தம்பி திவாகரன் கூறும் போது, துக்க நிகழ்ச்சிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். வராமலும் போகலாம். இதை அரசியல் ஆக்க வேண்டாம்.

யாருக்கும் எந்தவிதமான அரசியல் நெருக்கடி கிடையாது. பதவி என்பது வேறு. ஆட்சி என்பது வேறு. தற்போது சோதனையான கால கட்டம் சக்கர வியூகத்தில் மாட்டி கொண்ட அபிமன்யு போல அ.தி.மு.க. சிக்கி தவிக்கிறது.

அதை எப்படியும் மீட்டெடுப்போம். எனக்கும், தினகரனுக்கும் எந்தவிதமான கருத்து வேறுபாடும் கிடையாது. பிரச்சினை எங்கள் இருவருக்கும் இல்லாத போது நடராஜன் எப்படி பிரச்சினையை தீர்த்து வைக்க முடியும். எடப்பாடி நல்ல முறையில் ஆட்சி செய்கிறார் என்றார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>