எதிர்கட்சித் தலைவர் அறைக்குள் செல்ல தம்மை அனுமதிக்காதது சர்வாதிகார செயல் : ஸ்டாலின்

 சபாநாயகருக்கு சட்டமே தெரியவில்லை என சாடினார். எது சட்டமன்றத்திற்குட்பட்ட பகுதி என்பது கூட அறியாதவராக சபாநாயகர் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். சட்டமன்ற உறுப்பினர் பணியை தடுத்ததாக சபாநாயகர் மீது உரிமை மீறல் பிரச்சனையை எழுப்புவேன் என்றார்

சபாநாயகருக்கு சட்டமே தெரியவில்லை என சாடினார். எது சட்டமன்றத்திற்குட்பட்ட பகுதி என்பது கூட அறியாதவராக சபாநாயகர் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். சட்டமன்ற உறுப்பினர் பணியை தடுத்ததாக சபாநாயகர் மீது உரிமை மீறல் பிரச்சனையை எழுப்புவேன் என்றார்

சென்னை: தர்ணா போராட்டத்திற்கு பின்னர் சட்டப் பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் அறைக்குள் செல்ல தம்மை அனுமதிக்காதது சர்வாதிகார செயல் என குற்றம்சாட்டினார். எதிர்கட்சித் தலைவரின் அறைக்கு தம்மையோ, மற்ற திமுக உறுப்பினர்களையோ அனுமதிக்க மறுப்பதாக சாடினார். இந்த சர்வாதிகாரப் போக்கை கண்டிக்கும் விதமாகவே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்ட அவர், பேரவை நடவடிக்கைகள் அனைத்திலும் திமுக உறுப்பினர்கள் பங்குபெற்றுள்ளதாக சுட்டிக்காட்டினார். வெளிநடப்பு செய்ய வேண்டும் என திட்டமிட்டு திமுக உறுப்பினர்கள் பேரவைக்கு வரவில்லை என உறுதிபட கூறிய ஸ்டாலின், சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்தால் நாட்டு மக்களுக்கு இதுகுறித்த உண்மை தெரிய வரும் என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், சபாநாயகருக்கு சட்டமே தெரியவில்லை என சாடினார். எது சட்டமன்றத்திற்குட்பட்ட பகுதி என்பது கூட அறியாதவராக சபாநாயகர் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். சட்டமன்ற உறுப்பினர் பணியை தடுத்ததாக சபாநாயகர் மீது உரிமை மீறல் பிரச்சனையை எழுப்புவேன் என்றார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>