எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைக்க கவர்னர் வித்யாசாகர் அழைப்பு இன்று மாலை பதவி ஏற்பு

Tamil_News_large_171097320170214235620_318_219

தமிழக அரசியலில் அடுத் தடுத்து ஏற்பட்டு வரும் பரபரப்புகள் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவுக்கு வரும் சூழ்நிலை உருவாகி வரும் என எதிர்பார்க்கப்படுறது. கவர்னர் முதலில் யாரை ஆட்சி அமைக்க அழைப்பார்? பன்னீர்செல்வத்தையா? அல்லது எடப்பாடி பழனிச் சாமியையா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் கூவத்தூரில் தங்கியிருந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு இன்று காலை தெரிவிக்கப்பட்டது. பகல் 12.30 மணிக்கு தன்னை வந்து சந்திக்கும்படி கவர்னர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்திருந்தார்.

இதை அறிந்ததும் கூவத்தூர் தனியார் சொகுசு விடுதியில் தங்கி இருந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடமும், அங்கு திரண்டிருந்த அ.தி.மு.க. தொண்டர்களிடமும் உற்சாகம் கரை புரண் டோடியது.

10.30 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி கூவத்தூரில் இருந்து கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டு வந்தார். அவருடன் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி ஆகியோரும் வந்தனர்.

12.30 மணிக்கு அவர்கள் 5 பேரும் கவர்னர் வித்யா சாகர்ராவை சந்தித்து பேசினார்கள். பதவி ஏற்பு விழா குறித்து கவர்னர், அவர்கள் 5 பேருடனும் விவாதித்தார்.

ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு முறைப்படி விடுத்ததாக அ.தி.மு.க தகவல் தெரிவித்து உள்ளது.15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிருபிக்க கவர்னர் உத்த்ரவிட்டு உள்ளார். கவர்னர் முறைப்படி அழைப்பு விடுத்ததை தொடர்ந்து புதிய அமைச்சரவை பட்டியலை கவர்னரிடம் கொடுப்பார்கள். இதையடுத்து இன்று மாலையே பதவி ஏற்பு விழா நடைபெறும் என்று தெரிகிறது.

கவர்னர் மாளிகையில் மிக, மிக எளிமையாக பதவி ஏற்பு விழா நடத்தப்படும். முதல்-அமைச்சருக்கும், மற்ற அமைச்சர்களுக்கும் கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>