எடப்பாடி பழனிச்சாமி்க்கு ஆளுநர் அழைப்பு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வாய்ப்பு?

2017-16-2--10-48-54j

தமிழக அரசியலில் அடுத் தடுத்து ஏற்பட்டு வரும் பரபரப்புகள் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவுக்கு வரும் சூழ்நிலை உருவாகி வரும் என எதிர்பார்க்கப்படுறது. கவர்னர் முதலில் யாரை ஆட்சி அமைக்க அழைப்பார்? பன்னீர்செல்வத்தையா? அல்லது எடப்பாடி பழனிச் சாமியையா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 11.30 மணிக்கு அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க கவர்னர் நேரம் ஒதுக்கியிருக்கிறார். அதன்படி எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 4 பேர் கவர்னரை சந்திப்பதற்காக கூவத்தூரில் இருந்து புறப்பட்டுள்ளனர். இந்த சந்திப்பின்போது ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவர்னர் அழைப்பு விடுத்ததும் புதிய அமைச்சரவை பட்டியலை கவர்னரிடம் கொடுப்பார்கள். இதையடுத்து பதவி ஏற்பு விழா நடைபெறும். கவர்னர் மாளிகையில் மிக, மிக எளிமையாக பதவி ஏற்பு விழா நடத்தப்படும். முதல்-அமைச்சருக்கும், மற்ற அமைச்சர்களுக்கும் கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

இதையடுத்து புதிய முதல்-அமைச்சர் தனக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தை சட்டசபையில் நிரூபித்துக்காட்ட வேண்டும் என்று உத்தரவிடுவார். இதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு கவர்னர் ஒரு வாரம் கால அவகாசம் கொடுப்பார் என்று தெரிகிறது.

அதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமிக்கு சட்டசபையில் பெரும்பான்மை பலம் உள்ளதா? என்பதை பலப்பரீட்சை நடத்த செய்து உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு சபாநாயகர் தனபால் வசம் விடப்படும். சபாநாயகர் முன்னிலையில் தான் பலப்பரீட்சை நடை பெறும்.அடுத்த வாரம் இந்த பலப்பரீட்சை நடைபெற வாய்ப்புள்ளது. அப்போது ஓ.பன்னீர்செல்வத்தை எத்தனை பேர் ஆதரிப்பார்கள், எடப்பாடி பழனிச்சாமியை எத்தனை பேர் ஆதரிப்பார்கள் என்பது துல்லியமாக தெரிந்து விடும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>