எங்கள் இறையாண்மையைக் காக்க எதையும் செய்வோம்- சீனா

1_07573

தென் சீனக் கடலின், சர்ச்சைக்குரிய தீவுப் பகுதியில் அமெரிக்கப் போர்க்கப்பல் பயணம்செய்ததற்கு, சீன வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தென் சீனக் கடல் பகுதியில் பல குட்டித்தீவுகள் உள்ளன. சர்வதேச அளவில், மிகப்பெரிய வர்த்தக மையமாகத் திகழ்கிறது தென் சீனக் கடல். இதனாலேயே, இந்தப் பகுதியில் உள்ள குட்டிக் குட்டித் தீவுகளுக்காக, உலக நாடுகளுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவிவருகிறது. இந்தப் பகுதியில் உள்ள ’டிரைடன்’ என்னும் தீவை சீனா ஆக்கிரமித்துள்ளது. இதே தீவை, தைவான் மற்றும் வியட்நாம் நாடுகள் சொந்தம் கொண்டாடிவருகின்றன.

சர்ச்சைக்குரிய இந்தப் பகுதியில்தான் சமீபத்தில், அமெரிக்கப் போர்க்கப்பல் கடந்துசென்றுள்ளது. இதனால், கடும் ஆத்திரம்கொண்டது சீனா. ‘சீனா சம்மதம் தெரிவிக்காமல், அமெரிக்கா மறுபடியும் தனது போர்க் கப்பலைச் சீனப் பகுதியான சீஷா தீவுகளுக்குப் பக்கத்தில் அனுப்பியுள்ளது. அமெரிக்காவின் இந்தச் செயல், சீன சட்டம் மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு முரணாக உள்ளது. இது, சீனாவின் இறையாண்மை, அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதத்தில் இருக்கிறது. சீனாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலான இதைப் போன்ற நடவடிக்கைகளை அமெரிக்கா உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். நாட்டின் இறையாண்மையைக் காக்கவும் பாதுக்காப்புக்கும் எங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்’ என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தீர்க்கமாகத் தெரிவித்துள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>