எங்களை பகைத்துக்கொண்டால் ஆட்சியில் தொடர முடியாது: திவாகரன்

201708140933353345_Dhivakaran-Says-you-hate-us-can-not-continue-to-rule_SECVPF

தொண்டர்கள் அனைவரும் டி.டி.வி.தினகரன் பக்கம் உள்ளனர். எங்களை பகைத்துக் கொண்டால் ஆட்சியில் தொடர முடியாது என சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.

மேலூர்:

அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம் மதுரை மாவட்டம் மேலூரில் இன்று மாலை நடைபெறுகிறது.

இதற்காக மேலூர்- அழகர்கோவில் ரோட்டில் உள்ள திடலில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு உள்ளது. வழி எங்கும் சசிகலா, தினகரன் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

பொதுக்கூட்ட ஏற்பாடுகளை சசிகலாவின் சகோதரர் திவாகரன் பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. பிரியவில்லை. ஒரே அணியாகதான் உள்ளோம். அரசை எதிர்த்து எதுவும் சொல்ல விரும்பவில்லை. அடிமட்ட தொண்டர்களையும் நிர்வாகிகளையும் நம்பி தான் அ.தி.மு.க. உள்ளது. அமைச்சர்களை நம்பி இல்லை.

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுடன் மற்ற கட்சிகள் கூட்டணி வைக்க விரும்பாது. தொண்டர்கள் அனைவரும் டி.டி.வி.தினகரன் பக்கம் உள்ளனர். எங்களை பகைத்துக் கொண்டால் ஆட்சியில் தொடர முடியாது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>