ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திநாடு தழுவிய போராட்டம்

மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் சுமார் 18 கோடி ஊழியர்கள் இன்று நடக்கும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கிறார்கள். பிஎம்எஸ் தொழிற்சங்கம் புறக்கணிக்கிறது.

மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் சுமார் 18 கோடி ஊழியர்கள் இன்று நடக்கும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கிறார்கள். பிஎம்எஸ் தொழிற்சங்கம் புறக்கணிக்கிறது.

புதுடெல்லி: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் இன்று நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுகின்றன. இதில் மொத்தம் 18 கோடி தொழிலாளர்கள் பங்கேற்கின்றனர். இதனால் நாடு முழுவதும் வங்கி பணிகள் மற்றும் போக்குவரத்து, தொலை தொடர்பு சேவைகள் கடுமையாக பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கேரளாவில் ஆளும் கட்சி தொழிற்சங்கள் போராட்டத்தில் பங்கேற்பதால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் சட்ட சீர்திருத்தத்தை கண்டித்தும், 7வது ஊதியக் கமிஷன் பரிந்துரைப்படி குறைந்தபட்ச ஊதியம் ரூ,18,000 ஆயிரம், ஓய்வூதியம் ரூ.3,000 உட்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாடு தழுவிய அளவில் தொழிற்சங்கங்கள் இன்று 24 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, உட்பட 30க்கு ேமற்பட்ட தொழிற்சங்கங்கள் இந்த ேபாராட்டத்தில் கலந்துகொள்கின்றன. கோல் இந்தியா, கெயில், ஓஎன்ஜிசி, என்.டிபிசி, எச்ஏஎல், பெல் நிறுவன ஊழியர்களும் இதில் கலந்து கொள்கின்றனர். வங்கி ஊழியர்கள் 6 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். புதிய மோட்டார் வாகன சட்டத்தை கண்டித்து லாரி, ஆட்டோ சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபடுகின்றன.
மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், இன்சுரன்ஸ், கட்டிட தொழிலாளர்கள், லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர் சங்கம் உள்பட பல்வேறு தரப்பிலிருந்து மொத்தம் 18 கோடி தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து அகில இந்திய தொழிற் சங்கத்தின் செயலாளர் அமர்ஜித் கவுர் கூறுகையில், ‘‘கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட தொழிற்சங்க போராட்டத்தைவிட, இந்த ஆண்டு போராட்டம் மிக பெரியதாக இருக்கும்’’ என்றார். நேற்று நள்ளிரவு 12 மணிக்கு துவங்கிய இந்த ஸ்டிரைக் இன்று நள்ளிரவு 12 மணி வரை நடத்தப்படுகிறது. இதனால் வங்கிப் பணிகள், போக்குவரத்து, தொலைத் தொடர்பு, விமான நிலையம், துறைமுகம், மின் உற்பத்தி நிலைய பணிகள் வெகுவாக பாதிக்கப்படும். தொழிற்சங்கங்களின் இந்த போராட்டத்தால், அத்தியாவசியப் சேவைகள் பாதிக்காத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அனைத்து துறை அமைச்சகங்களையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அரசுத்துறை பணிகள் சுமூகமாக நடைபெற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்படி துறை செயலாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தொழிற்சங்க போராட்டம் குறித்து மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தா–்ரோ மும்பையில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு முந்தைய ஐ.மு.கூட்டணி அரசுதான் காரணம். தொழிற்சங்கங்களுடன் தற்போதைய மத்திய அரசு எந்த முரண்பாட்டையும் விரும்பவில்ைல. அவர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் எங்களுக்கு தேவை’’ என்றார்.

பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை: கேரளாவில் ஆளும் கட்சி ஆதரவு தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் தீவிரமாக உள்ளதால் ெபாதுமக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ேநற்று இரவு முதலே தொலை தூர அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன. ஆட்டோ, டாக்சி, வேன். லாரிகள் உட்பட எந்த வாகனமும் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் அலுவலகங்களிலும் ஊழியர்கள் குறைவாகவே பணிக்கு வருவார்கள் என்று கருதப்படுகிறது. பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக ேதர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
அரசு பஸ்கள், ரயில்கள் ஓடுமா?: இன்று நடக்க உள்ள நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆளும்கட்சியின் அண்ணா தொழிற்சங்கம் ஆதரவு அளிக்கவில்லை. எனவே அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளை கொண்டு பஸ்கள் இயக்கப்படும் என அந்த தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். இருந்தாலும், பெரும்பாலானோர் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்வதால், முழு அளவில் பஸ்கள் இயக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதே போன்று ரயில்வே தொழிற்சங்கங்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தாலும், ரயில்கள் இயக்கப்படும் என்றே கூறப்படுகிறது.

தமிழகத்தில் பாதிக்குமா?: தமிழகத்தில் போராட்டத்துக்கு தொமுச, சிஐடியு, எச்.எம்.எஸ் உள்பட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதுகுறித்து தொமுச பொதுச்செயலாளர் சண்முகம், ஐஎன்டியுசி மாநிலத் தலைவர் கோவிந்தராஜன், ஏஐடியுசி மாநில பொதுச்செயலாளர் பி.எம்.மூர்த்தி உள்பட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளும் நேற்று சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், மத்திய அரசு உடனே இப்பிரச்னைக்கு சுமூக தீர்வு காண வேண்டும். அப்படி இல்லையென்றால் எங்கள் போராட்டம் வலுவடையும். தமிழகத்தில் நாளை (இன்று) பேருந்து, வங்கி, பொது நிறுவனங்கள் ஆகியவற்றின் சேவை முற்றிலும் பாதிக்கப்படும் என்றனர். அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாசலம் கூறியதாவது : நாடு முழுவதும் 6 லட்சம் வங்கி அதிகாரிகள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். பொதுத்துறை வங்கி, தனியார் வங்கி, அயல்நாட்டு வங்கி, கிராமிய வங்கி, கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். தமிழகத்தில் மட்டும் 40 ஆயிரம் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இதனால் ஒரு நாள் வங்கி சேவை முழுமையாக பாதிக்கும். காசோலை பரிமாற்றம் ஒரு நாள் தள்ளி போகும். ஏடிஎம்களிலும் பணம் இருக்கும் வரை எடுத்துக் கொள்ளலாம் என்றார்.

* மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் சுமார் 18 கோடி ஊழியர்கள் இன்று நடக்கும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கிறார்கள். பிஎம்எஸ் தொழிற்சங்கம் புறக்கணிக்கிறது.
* வங்கி ஊழியர்கள் மட்டும் 6 லட்சம் பேர் பங்கேற்கிறார்கள்.
* மேற்குவங்கத்தில் வேலைநிறுத்தத்திற்கு முதல்வர் மம்தா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கொல்கத்தா நகரில் மட்டும் பாதுகாப்பிற்கு 3000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
* கேரளாவில் பள்ளி, கல்லூரிக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
* கடந்த ஆண்டு நடந்த வேலைநிறுத்தத்தில் 14 லட்சம் பேர் பங்கேற்றார்கள்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>