உ.பி.யில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணிடம் சிறுநீரகம் திருட்டு

உ

லக்னோ: பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணிடம் சிறுநீரகம் திருடியதாக தனியார் மருத்துவமனை மீது புகார் எழுந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மோசடி நிகழ்ந்துள்ளது. படிப்பறிவு இல்லாத அந்த பெண் பிரசவ வலி ஏற்பட்டவுடன் கிராம செவிலியரின் உதவியை நாடியுள்ளார். பின்னர் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார்.

குடும்பத்தினர் உதவியுடன் மற்றொரு மருத்துவமனையில் உடல் பரிசோதனை நடத்திய போது அவரது சிறுநீரகம் அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. சிறுநீரகம் திருட்டு குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவ நிர்வாகி, மருத்துவர்களே சிகிச்சைக்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கூறியுள்ளார். பெண்ணின் புகாருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரே பதில் கூற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>