உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சி, சேலம்,

arivalalayam-1

தூத்துக்குடி மாநகராட்சிக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் இருகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகிறது. இந்நிலையில் இன்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கான இடங்களை திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டார்.

தூத்துக்குடி மாநகராட்சி

தூத்துக்குடியில் 6, 25, 35, 39, 50, 58, 59 ஆகிய 7 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியில் இந்தியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 20, 53 ஆகிய இரண்டு வார்டுகளை ஒதுக்கியுள்ளது.

சேலம் மாநகராட்சி

சேலம் மாநகராட்சியில் 8, 9, 16, 17, 36 ஆகிய 5 வார்டுகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. சேலத்தில் 19-வது வார்டு இந்தியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சேலத்தில் 1, 2, 3, 4, 5, 7, 10, 11, 12, 13, 14, 15, 18, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46 ஆகிய வார்டுகளில் திமுக போட்டியிடுகிறது.

திருச்சி மாநகராட்சி

திருச்சி மாநகராட்சியில் 14, 37, 44 ஆகிய 3 வார்டுகள் காங்கிஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சியில் சாருபாலா போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சியில் உள்ள 5, 6, 19, 28, 35, 50, 54, 64, 65 ஆகிய வார்டுகள் குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும். திருச்சி 42-வது வார்டில் திமுக சார்பில் காஜாமலை விஜய் போட்டியிடுகிறார். 46-வது வார்டில் திமுக சார்பில் டி.ராமமூர்த்தி, 57-வது வார்டில், விஜயா ஜெயராஜ், 45-வது வார்டில் வெ.ராமதாஸ், போட்டியிடுகின்றனர். இதில் விஜயா ஜெயராஜ் கடந்த முறை மேயர் தேர்தலில் போட்டியிட்டவர் ஆவார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>