உள்நாட்டு நீர்வழியை மேம்படுத்த ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் – மத்திய அமைச்சர் நிதீன்கட்காரி தகவல்

nitin gadkari(N)

புதுடெல்லி : உள்நாட்டு நீர்வழிகளை மேம்படுத்த மத்திய சாலை நிதியில் இருந்து ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யும்படி பாராளுமன்றத்தில் மசோதா கொண்டுவரப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நதீன்கட்காரி தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது இருக்கும் உள்நாட்டு நீர்வழிகளை மேம்படுத்தவும் 106 புதிய நீர்வழிகளை ஏற்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு தேசிய நீர்வழிச் சட்டம் 2016 இயற்றப்பட்டது. இந்த பாராளுமன்ற கூட்டத்தில் உள்நாட்டு நீர்வழிகளை மேம்படுத்த மத்திய சாலை நிதி 2017 திருத்த மசோதா கொண்டு வரப்படும். இந்த மசோதாவில் உள்நாட்டு நீர்வழிகளை மேம்படுத்த ரூ.2 அயிரம் கோடி ஒதுக்கீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படும் என்று மத்திய சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதீன்கட்காரி நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.

இந்த மசோதா நிறைவேறியதும் உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து ஊக்குவிக்கப்படும். நீர்வழியாக சரக்கு போக்குவரத்திற்கு குறைந்த கட்டணமேயாகும். மேலும் விரைவாகவும் சரக்குகள் கையாளப்படும். மத்திய சாலை நிதி 2000-ம் ஆண்டு சட்டத்தில் மத்திய கப்பல்போக்குவரத்து துறையும் மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகமும் சேர்ந்து திருத்தம் கொண்டு வந்துள்ளதற்கு கடந்த மே மாதம் மத்திய கேபினட் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த திருத்த மசோதாவில் மத்திய சாலை நிதியில் இருந்து 2.5 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்ய வகை செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் உயர்வேக டீசலுக்கு வரி விதிப்பதின் மூலம் மத்திய சாலை நிதி உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு 6 சதவீத வரி விதிக்கப்படுகிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>