உலக ஹாக்கி லீக் பைனல்ஸ்: அரையிறுதில் இந்திய அணி

201712070018206095_India-qualifies-for-semifinals-of-World-Hockey-League-Finals_SECVPF

உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் தொடரின் காலிறுதி போட்டியில் பெல்ஜியத்தை வீழ்த்திய இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

புவனேஸ்வர்:

ஹாக்கியில் சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்கும் உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் தொடர் போட்டிகள் ஒடிசாவில் நடந்து வருகிறது. நேற்று காலிறுதி போட்டிகள் நடைபெற்றன. இரவு 7:30 மணிக்கு தொடங்கிய காலிறுதி போட்டியில் இந்தியா – பெல்ஜியம் அணிகள் மோதின.

இப்போட்டியின் முதல் 30 நிமிட ஆட்டத்தில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தின் 31-வது நிமிடம் இந்தியாவின் குர்ஜந்த் சிங் முதல் கோல் அடித்தார். அதன்பின் 35-வது நிமிடத்தில் இந்திய வீரர் ஹர்மன்பிரீத் சிங் கோல் அடித்தார். இதனால் 2-0 என்ற போல் கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது. இதையடுத்து பெல்ஜியம் அணி சிறப்பாக விளையாடியது.

பெல்ஜியம் அணியின் லைபார்ட் லாயிக் 39-வது மற்றும் 46-வது நிமிடத்தில் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்தார். இதனால் ஆட்டம் 2-2 என சமனானது. 46-வது நிமிடத்தில் இந்தியாவின் ருபிந்தர் பால் சிங் ஒரு கோல் அடித்தார். அடுத்ததாக 53-வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் கியூஸ்டர்ஸ் அமவுரி ஒரு கோல் அடித்தார். அதன்பின் மேற்கொண்டு எந்த கோலும் அடிக்காததால் ஆட்டம் 3-3 என சமனில் முடிந்தது.

இது நாக்-அவுட் சுற்று என்பதால் வெற்றியை தீர்மானிக்க பெனால்டி சூட்-அவுட் முறை பின்பற்றப்பட்டது. இதில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

மாலை 5:30 மணிக்கு நடைபெற்ற மற்றொரு காலிறுதி போட்டியில் ஸ்பெயின் – ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

இப்போட்டியின் 12-வது நிமிடத்தில் ஸ்பெனின் மார்க் கார்சியா முதல் கோல் அடித்தார். அடுத்து 28-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஜெர்மி ஹய்வார்ட் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனானது. அதன்பின் நான்காவது கால்பகுதி நேர ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அதிரடியாக விளையாடினர்.

48-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஆரோன் கிலெயின்ஸ்மிட் கோல் அடித்தார், தொடர்ந்து 50-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் பிளேக் கோவர்ஸ் அடுத்தடுத்து இரண்டு கொல்கள் அடித்தார். ஆஸ்திரேலிய அணியினர் அடித்த அனைத்து கோல்களும் பெனால்டி வாய்ப்பில் அடிக்கப்பட்டவையாகும். ஆனால் ஸ்பெயின் அணியினர் இறுதிவரை மேற்கொண்டு எந்த கோலும் அடிக்கவில்லை. இதையடுத்து 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அறையிறுதி போட்டிக்கு முன்னேறியது.

இன்று நடைபெறும் காலிறுதி போட்டிகளில் இங்கிலாந்து – அர்ஜெண்டினா, ஜெர்மனி – நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை செய்ய உள்ளன.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>