உலகில் 90 சதவீதம் பேர் அசுத்த காற்றை சுவாசிக்கின்றனர்

உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும், அனைத்து சமூகத்தினரும் காற்று மாசுவினால் பாதிக்கப்படுகின்றனர். காற்று மாசு காரணமாக உயிரிழப்பவர்களில் 90 சதவீதம் பேர் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும், அனைத்து சமூகத்தினரும் காற்று மாசுவினால் பாதிக்கப்படுகின்றனர்.
காற்று மாசு காரணமாக உயிரிழப்பவர்களில் 90 சதவீதம் பேர் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

ஜெனீவா: உலக அளவில் 10ல் 9 பேர் அசுத்த காற்றையே சுவாசிக்கின்றனர் என்று உலக சுகாதார அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு நாடு முழுவதும் சுமார் 3000 பகுதிகளில் காற்று மாசு குறித்து ஆய்வு மேற்கொண்டது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பிரிவின் தலைவர் மரியாநெய்ரா கூறியதாவது: காற்று மாசுவினால் நகரத்தில் வாழ்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனினும் கிராமப்புற பகுதிகளில் வசிப்பவர்கள்தான் காற்று மாசு காரணமாக அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும், அனைத்து சமூகத்தினரும் காற்று மாசுவினால் பாதிக்கப்படுகின்றனர். இதனை பொதுமக்களின் சுகாதாரம் குறித்த அவசர நிலையாக கருத வேண்டும். மக்கள் தொகையில் 92 சதவீதம் பேர் உலக சுகாதார அமைப்பால் அனுமதிக்கப்பட்ட 2.5 மைக்ரான் தூசுகள் கொண்ட சுகாதாரமற்ற காற்றையே சுவாசிக்கின்றனர். உலக அளவில் 10ல் 9 பேர் அசுத்த காற்றைத்தான் சுவாசிக்கின்றனர்.

காற்று மாசு காரணமாக உயிரிழப்பவர்களில் 90 சதவீதம் பேர் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர். ெதன்கிழக்கு ஆசியா, மலேசியா மற்றும் வியட்நாம் நாடுகளை சேர்ந்தவர்கள் காற்று மாசினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். காற்று மாசு காரணமாக ஆண்டுக்கு 60 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>