உலகிலேயே வயதான நபர் இந்தோனேசியாவின் மபஹ கோதோ வயது 145 ஆகிறது

மத்திய ஜாவாவின், ஸ்ரகேனில் டிசம்பர் 31, 1870 அன்று மபஹ கோதோ பிறந்தார். ஏற்கனவே பிரான்சை சேர்ந்த 122 வயதான ஜென்னி கால்மென்ட் என்ற நபர் உலகின் வயதான நபராக உயிருடன் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மத்திய ஜாவாவின், ஸ்ரகேனில் டிசம்பர் 31, 1870 அன்று மபஹ கோதோ பிறந்தார். ஏற்கனவே பிரான்சை சேர்ந்த 122 வயதான ஜென்னி கால்மென்ட் என்ற நபர் உலகின் வயதான நபராக உயிருடன் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் தான் உலகிலேயே வயதான நபர் வாழ்ந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 145 ஆண்டுகள் வயதுடைய ஒரு இந்தோனேசிய மனிதர் தான், உலகின் மிக வயதான மனிதர் என நம்பப்படுகிறது. மத்திய ஜாவாவின், ஸ்ரகேனில் டிசம்பர் 31, 1870 அன்று மபஹ கோதோ பிறந்தார். ஏற்கனவே பிரான்சை சேர்ந்த 122 வயதான ஜென்னி கால்மென்ட் என்ற நபர் உலகின் வயதான நபராக உயிருடன் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மத்திய ஜாவாவில் உள்ள சிரோகன் என்ற இடத்தில் வசித்து வருவதாகவும், ஆவணங்களின்படி அவரது பிறந்த தேதி 1870-ம் ஆண்டு, டிசம்பர் 31 ஆகும். இது உண்மையானால், உலகிலேயே வயதான நபர் என்ற பெயரை மபஹ கோதோ பெறுவார்.

மபஹ கோதோ தனது உடன்பிறப்புகள் 10 பேர், 4 மனைவிகள் மற்றும் அவரது குழந்தைகளை கடந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர்கள் அனைவரும் மரணம் அடைந்து விட்டநிலையில், பேரக்குழந்தைகள், கொள்ளுப்பேரக்குழந்தைகளுடன் அவர் வாழ்ந்து வருகிறார்.

மேலும் இவர் தனது கல்லறைக்கு தேவையான பொருட்களை 20 ஆண்டுகளுக்கு முன்பே வாங்கி வைத்து விட்டதாகவும், தான் இறக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>