உலகின் முதலாவது ரயில் மருத்துவமனையான லைஃப்லைன் எக்ஸ்பிரஸ், 25 ஆண்டுகளை பூர்த்தி செய்தது

உலகின் முதலாவது ரயில் மருத்துவமனையான லைஃப்லைன் எக்ஸ்பிரஸ், 25 ஆண்டுகளை பூர்த்தி செய்தது

இந்த ரயில் கடந்த 25 ஆண்டுகளில் 18 மாநிலங்களில் 173 திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறது. 2 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்துள்ளது.
கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இதன் சேவையால் பயன் அடைந்து இருக்கிறார்கள். கண் அறுவை சிகிச்சை, காது கேட்பதற்கான சிகிச்சை, பிளவு ஏற்பட்டுள்ள உதடுகளை சரி செய்தல் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகளை இலவசமாக வழங்கி இருக்கிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

உலகின் முதலாவது ரயில் மருத்துவமனையான லைஃப்லைன் எக்ஸ்பிரஸ், 25 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது.

இதற்கான விழா மும்பையில் நடந்தது. மருத்துவமனைகளே இல்லாத கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் ஏழைகள் மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு மருத்துவ வசதிகள் வழங்குவதற்காக லைப்லைன் எக்ஸ்பிரஸ் கடந்த 1991ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இந்தியாவின் மேஜிக் ரயில் என்றும் இது அழைக்கப்படுகிறது.   முதலில்3 பெட்டிகள் இதில் இணைக்கப்பட்டிருந்தன. 2007ம் ஆண்டு உருவாக்கப்பட்ட புதிய லைப்லைன் எக்ஸ்பிரசில் 5 பெட்டிகள் இணைக்கப்பட்டன. லைப்லைன் எக்ஸ்பிரஸ் தனது 25 ஆண்டுகள் சேவை பூர்த்தியானதை  கொண்டாடியது.

இதற்கான விழா மும்பையில் நடைபெற்றது. மேற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜி.சி.அகர்வால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த ரயில் கடந்த 25 ஆண்டுகளில் 18 மாநிலங்களில் 173 திட்டங்களை ெசயல்படுத்தி இருக்கிறது. 2 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்துள்ளது.

கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இதன் சேவையால் பயன் அடைந்து இருக்கிறார்கள். கண் அறுவை சிகிச்சை, காது கேட்பதற்கான சிகிச்சை, பிளவு ஏற்பட்டுள்ள உதடுகளை சரி செய்தல் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகளை இலவசமாக வழங்கி இருக்கிறது.

இந்த ரயில் ‘இம்பேக்ட் இந்தியா பவுண்டேஷன்’ என்ற அமைப்பும் ரயில்வேயும் சேர்ந்து உருவாக்கிய திட்டம் ஆகும். கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் கிராமப்புற பகுதி மக்களின் வாழ்க்கையில் இந்த ரயில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கி உள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>