உலகின் மிகப்பெரிய பொருளாதார வல்லரசு யார்…?

america_flag_10133

வாஷிங்டன்: உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்தியாக, சீனா மிக வேகமாக முன்னேறி வருவதாக உலக நாடுகள் கூறுகின்றன; அதே நேரத்தில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதாகவும் அவை கூறியுள்ளன. இந்தியா உட்பட, 38 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

பியூ ஆராய்ச்சி மையம், உலகின், பொருளாதார சக்தியாக விளங்கும் நாடு குறித்த ஆய்வை, இந்தியா உட்பட, மிக முக்கியமான, 38 நாடுகளில் மேற்கொண்டது. இந்த ஆய்வு குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: உலகின் மிகப் பெரிய பொருளாதார மையமாக சீனா மிக வேகமாக முன்னேறி வருகிறது. உலகின் பொருளாதார மையமாக சீனா உள்ளதாக, 32 சதவீத நாடுகளில் உள்ளவர்கள் கூறியுள்ளனர். அதே நேரத்தில், 42 சதவீத ஓட்டுகளுடன், அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவுக்கு, 51 சதவீதமும், சீனாவுக்கு, 35 சதவீதமும் ஓட்டளித்துள்ளனர். ஐரோப்பிய யூனியனில் உள்ள, 10 நாடுகளில், ஏழு நாடுகள், சீனாவைத் தான் தேர்ந்தெடுத்துள்ளன. அமெரிக்காவின் நீண்டநாள் நட்பு நாடான ஆஸ்திரேலியாவிலும், சீனாவே முதலிடத்தில் உள்ளது. இந்தியாவை பொருத்தவரை, அமெரிக்கா தொடர்ந்து பொருளாதார வல்லரசாக உள்ளது. சீனாவுக்கு, 26 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்தாலும், 41 சதவீத மக்கள் அதற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில், அமெரிக்கா மற்றும் சீனாவின் தலைவர்களுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உலகளாவிய பொருளாதாரத்துக்கு எதையும் செய்யவில்லை என, சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு எதிராக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உலக அளவில், 53 சதவீத மக்கள், ஜின்பிங் மீது நம்பிக்கை இல்லை என்று கூறியுள்ளனர். ஜின்பிங் மீது ஆப்பிரிக்க நாடுகளான தான்சானியா, நைஜீரியா, செனகல், ரஷ்யா, பிலிப்பைன்ஸ் ஆகிய, ஐந்து நாடுகள் மட்டுமே நம்பிக்கை தெரிவித்துள்ளன.

அதே நேரத்தில், 74 சதவீத மக்கள், டிரம்ப் மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக, 59 சதவீத மக்கள் விரக்தியை தெரிவித்துள்ளனர். ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் மட்டுமே, மக்களின் நம்பிக்கையை அதிக அளவில் பெற்றுள்ளார். 42 சதவீத மக்கள் அவர் மீது நம்பிக்கை தெரிவித்துள்ளனர்; 31 சதவீத மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>