உலகம் முழுவதும் 3250 திரையரங்குகளில் ‘விவேகம்’ ரிலீஸ்:கதிர்

Ajith-Vivegam-still

அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய், கருணாகரன் உள்பட பலர் நடிப்பில் சிவா இயக்கிய ‘விவேகம்’ திரைப்படம் வெளியாக இன்னும் சில மணி நேரங்களே உள்ளது. இந்த நிலையில் இந்த படம் ரிலீசாகும் திரையரங்குகளின் எண்ணிக்கை கோலிவுட்டை மலைக்க வைத்துள்ளது.

இதுவரை வெளிவந்த தகவலின்படி இந்த படம் சுமார் 3250 திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. தமிழ்நாடு – 1000, ஆந்திர பிரதேஷ் – 450, கேரளா – 300, கர்நாடகா – 300, மலேசியா – 600, யுனைடட் ஸ்டேட்ஸ். 340, வேறு மாநிலங்கள் – 260 ஆக மொத்தம் இந்த படம் 3250 திரையரங்குகளில் வெளியாகிறதாம்

இதன்படி 3250 தியேட்டர்களில் சராசரியாக 500 இருக்கைகள் இருந்து ஒரு டிக்கெட் விலை ரூ.100 என்று விற்பனையானாலும் ஒரு காட்சிக்கு 16 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகும். முதல் நாள் ஐந்து காட்சிகள் திரையிடப்பட்டால் முதல் நாள் வசூலே ரூ.80 கோடிக்கும் மேல் அதிகமான வசூலை பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>