உலககோப்பை வெல்லுமா? இந்தியா அணி:மகிழ்

WWC

அரையிறுதியில் இந்திய அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, இறுதி போட்டிக்கு நுழைந்தது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது முதலே பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. இறுதி போட்டிக்கு நுழைந்ததற்கே இந்திய அணிக்கு பரிசு தொகை அறிவிக்கப்படும் என்று அறிவித்தது பிசிசிஐ.

இறுதி போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வைத்து நடை பெறுகிறது. பொதுவாகவே மகளிர் கிரிக்கெட் போட்டிகள் ஆண்கள் கிரிக்கெட் ஆடும் பெரிய மைதானகளில் நடப்பது இல்லை. இந்த முறையும் அரையிறுதி ஆட்டங்கள் வரை, இங்கிலாந்தில் உள்ளூர் போட்டியான கவுண்டி கிரிக்கெட் நடைபெறும் மைதானங்களில்தான் நடைபெற்றது. தற்போது இறுதி போட்டியானது புகழ் பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடப்பது ஸ்பெஷல்தான்.

இந்திய அணியில் மூத்த வீராங்கனைகள், கேப்டன் மித்தாலி ராஜ் மற்றும் வேகபந்துவீச்சாளர் ஜூலான் கோஸ்வாமி தான். மித்தாலி ராஜி மகளிர் கிரிக்கெட் உலகில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை. ஜூலான் கோஸ்வாமி மகளிர் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்கள் வீத்திய பந்துவீச்சாளர். இந்த இரு வீராங்கனைகளுக்கும், இது கடைசி உலக கோப்பையாக இருக்கலாம்.

1973 முதல் நடந்து வரும் மகளிர் உலககோப்பையில், இதுவரை ஆஸ்திரேலியா ஆறு முறையும், இங்கிலாந்து மூன்று முறையும், நியூசிலாந்து ஒரு முறையும் கோப்பையை கைப்பற்றி உள்ளது. இந்த முறை இந்திய அணி கோப்பையை கைப்பற்றனால் இந்திய வெல்லும் முதல் மகளிர் உலககோப்பையாக அது அமையும். அதோடு மகளிர் உலககோப்பையை கைப்பற்றும் முதல் ஆசிய அணி என்ற பெருமையும் வந்து சேரும்.

இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னால் கடந்த 2005-ல், தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலககோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்க எதிராக தோல்வி அடைந்தது. இந்த தொடரில் பல மகத்தான சாதனைகளை செய்த இந்திய அணி, கோப்பையை வெல்வார்களா எனபது நாளை தெரிந்து விடும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>