உரிமைக்குழு நோட்டீசை எதிர்த்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வழக்கு: ஐகோர்ட்டில் நாளை விசாரணை

201709061317407332_DMK-opposes-privileges-committee-notice-files-petition-in_SECVPF

உரிமைக்குழு நோட்டீசை எதிர்த்து தி.மு.க. எல்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கு நாளை (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் குட்கா, பான்மாசலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் இந்த பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுவதாக கூறி, கடந்த சட்டசபை கூட்டத் தொடரில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குற்றம் சாட்டினர். இதற்காக, தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்களை அவைக்குள் கொண்டு சென்றனர்.

இதற்கு சபாநாயகர் ப.தனபால் கடும் கண்டனம் தெரிவித்தார். பின்னர் எதிர்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் உள்பட 21 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவையின் உரிமையை மீறியதாக குற்றம் சாட்டி, உரிமை குழு விசாரணைக்கு உத்தரவிட்டார். இதுகுறித்து விசாரணை நடத்திய உரிமை குழு, செப்டம்பர் 5ந் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி 21 பேருக்கும் நோட்டீசு அனுப்பியது.

இதன்படி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 பேரும், சபாநாயகரை நேற்று நேரில் சந்தித்து, விளக்கம் அளிக்க 15 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக் கோரி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்.எல்.ஏ.க்கள், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அதில், ‘எம்.எல்.ஏ.க்களின் பேச்சுரிமையை தடுக்கும் வகையில் சபாநாயகரும், உரிமைக்குழுவும் செயல்படுகிறது. அதனால், உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யவேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கவேண்டும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு தி.மு.க. தரப்பு மூத்த வக்கீல் சண்முக சுந்தரம் ஆஜராகி கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை நாளை (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>