உயிருக்கு பாதுகாப்பு கேட்டு வந்தவர் காவல் நிலையம் அருகிலேயே கொலை : உறவினர்கள் சாலை மறியல்

பதிவிறக்கு

வேலூர்: வேலூர் மாவட்டம் சோழிங்கர் அருகே உயிருக்கு பாதுகாப்பு கேட்டு வந்தவர் காவல் நிலையம் அருகிலேயே கொலை செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கொலையானவர் பானாவரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சுரேஷ். இவர் சொத்து தகராறில் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு பானாவரம் காவல் நிலையத்தில் 5 முறை புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் புகார் அளிக்க வந்த போது காவல் நிலையம் அருகிலேயே சுரேஷ் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆத்திரமடைந்த சுரேஷின் உறவினர்கள் காவிரிபாக்கம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. சாலை மறியலால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று காவல் நிலையத்தில் வைத்து தாக்கினர்.

அங்கிருந்த இருசக்கர வாகனங்களையும் போலீசார் அடித்து உதைத்தனர். சுரேசுக்கும் அதே ஊரைச் சேர்ந்த அசோகன் என்பவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது. அசோகனின் அண்ணன் சிவக்குமார் சென்னையில் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இதனால் சுரேஷை அசாகன் பலமுறை தாக்கியும் கொலை மிரட்டல் விடுத்தும் வந்துள்ளார். போலீசார் கொலையாளிக்கு சாதகமாக செயல்படுவதாக சுரேஷின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>