உயர்நீதிமன்றம்:திரைப்படங்கள் மாணவ சமுதாயத்தை சீரழிப்பதாக கண்டனம் .

552673-CensorBoardCREATIVECOMMONS-1369199061-133-640x480

சென்னை: சினிமா படங்களை பார்த்து வீட்டை விட்டு வெளியேறியதாக மாணவி வாக்குமூலம் அளித்த வழக்கில், திரைப்பட தணிக்கை குழு தலைமை அதிகாரி வரும் 27-ம் தேதி ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு மாயமான பள்ளி மாணவி, ஆட்கொணர்வு வழக்கில் நீதிபதி நாகமுத்து மற்றும் அனிதா முன் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதிகள் முன் வாக்குமூலம் அளித்த மாணவி, சினிமா படங்களை பார்த்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாக கூறினார்.

இதனையடுத்து தற்போது வெளியாகும் திரைப்படங்கள் மாணவ சமூகத்தை சீரழிக்கும் வகையில் உள்ளதாக நீதிபதி நாகமுத்து கண்டனம் தெரிவித்தார். இது குறித்து வரும் 27-ம் தேதி திரைப்பட தணிக்கை குழு தலைமை அதிகாரி , நேரில் ஆஜராகி விளக்கமளிக்க அவர் உத்தரவிட்டார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>