உயர்நீதிமன்றத்தில் CISF பாதுகாப்பை நீட்டிக்கப்படுமா..?

PicsArt_03-22-07.03.47

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் CISF பாதுகாப்பை நீட்டிக்க வேண்டுமா என்பது தொடர்பாக அடுத்த மாதம் விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்றத்தில் CISF பாதுகாப்பு, கட்டாய ஹெல்மெட் போன்றவற்றிற்கு எதிராக போராடியதால் 40 வழக்கறிஞர்களை பார்கவுன்சில் இடைநீக்கம் செய்துள்ளது. இதற்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ரவிச்சந்திர பாபு அடங்கிய சிறப்பு அமர்வுக்கு வழக்கை மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் சிறப்பு அமர்வில் தனித்தனியே மனு தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்திய நீதிபதிகள், அடுத்த மாதம் 14-ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர். உயர்நீதிமன்ற வளாகத்திற்கு CISF பாதுகாப்பை வாபஸ் பெற வேண்டும் என்ற வழக்கறிஞர்களின் கோரிக்கையை கேட்டறிந்த தலைமை நீதிபதி, இதுபற்றி ஏப்ரலில் விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>