உனா சம்பவத்தில் தாக்கப்பட்டதலித் இளைஞர்களை சந்திக்கிறார் மாயாவதி

உனா சம்பவத்தில் தாக்கப்பட்டதலித் இளைஞர்களை சந்திக்கிறார் மாயாவதி : 4ம் தேதி குஜராத் பயணம்

உனா சம்பவத்தில் தாக்கப்பட்டதலித் இளைஞர்களை சந்திக்கிறார் மாயாவதி : 4ம் தேதி குஜராத் பயணம்

அகமதாபாத்:குஜராத்தில் உனா என்ற இடத்தில் தாக்கப்பட்ட தலித் இளைஞர்களின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக மாயாவதி வருகிற 4ம் தேதி குஜராத் செல்கிறார். குஜராத்தில் கடந்த வாரம் இறந்த பசு மாட்டின் தோலை உரித்ததற்காக தலித் இளைஞர்கள் 4 பேரை பசு பாதுகாப்பு சங்கத்தினர் பொது இடத்தில் வைத்து கொடூரமாக தாக்கினர். இந்த சம்பவம் வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதையடுத்து நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. பார்லிமென்டிலும் எதிர்கட்சிகள் அமளியை கிளப்பின. அதே நேரத்தில் குஜராத் முழுவதும் ஏராளமான அமைப்புகள் உனா சம்பவத்தை கண்டித்து தினந்தோறும், போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட நெருக்கடியால் நேற்று முதல்வர் ஆனந்தி பென் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதற்கிடையில் தாக்கப்பட்ட இளைஞர்களை ஏற்கனவே காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ஜேடியூ தலைவர் சரத் யாதவ் ஆகியோர் சந்தித்து பேசினர். இவர்களை தொடர்ந்து உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி வருகிற 4ம் தேதி குஜராத் சென்று உனாவில் பாதிக்கப்பட்ட இளைஞர்களையும், அவரது குடும்பத்தினர்களையும் சந்திக்க உள்ளார். இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் குஜராத் மாநில பொது செயலாளர் பிரதீப் பார்மர் கூறுகையில், ‘‘மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தலித் இளைஞர்களை மாயாவதி வரும் 4ம் தேதி சந்திக்கிறார் என்றார். மேலும் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக குஜராத் பகுஜன் சமாஜ் கட்சியினரை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார் என்றும் பார்மர் குறிப்பிட்டார். குஜராத்தில் தலித்கள் போராட்டம் வலுத்துள்ள நிலையில் மாயாவதியின் வருகை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>