உதவித்தொகை கிடைக்காததால் உயர்கல்வி பயிலும் 4லட்சம் மாணவர்கள் இடைவிலகல் செய்யும் அபாயம் ஏற்பட்டுள்ளது:பரதன்

தமிழகத்தில் பட்டியலின மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உதவித்தொகை கிடைக்காததால் உயர்கல்வி பயிலும் 4லட்சம் மாணவர்கள் இடைவிலகல் செய்யும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அம்பேத்கர் கல்வி நூற்றாண்டு இயக்கத்தின் மாநில அமைப்பாளர் பரதன் தெரிவித்துள்ளார்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் அம்பேத்கர் கல்வி நூற்றாண்டு இயக்கத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

தமிழ்நாட்டில் 7.76லட்சம் மாணவர்கள் உயர்கல்வி பயின்று வருகின்றனர். இவர்களுக்கு 2016-2017 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை 1600 கோடியை அரசாங்கம் ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால் இந்த வருட நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு ஒதுக்கிய 1430 கோடி கடந்த வருட நிலுவைத்தொகைக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வருடம் கல்வி பயிலும் மாணவர்கள் 4லட்சம் பேர் உரிய நேரத்தில் கல்விக்கட்டணம் செலுத்த முடியா நிலை ஏற்பட்டுள்ளது என அவர்கள் குற்றம்சாட்டினர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்பேத்கர் கல்வி நூற்றாண்டு இயக்கத்தின் மாநில அமைப்பாளர் பரதன் தமிழகத்தில் உயர்கல்வி படிக்கும் பட்டியலின மாணவர்கள் அரசாங்கத்தின் கல்வி உதவித்தொகை உரிய நேரத்தில் கிடைக்காத காரணத்தால் இடை விலகல் செய்யும் சூழல் அதிகரித்துள்ளது.மேலும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் பட்டியலின மாணவர்களுக்கு ஒதுக்கவேண்டிய இடத்தை வழங்குவதற்கு அதிக பணம் வசூலிக்கிறார்கள் அரசாங்கம் இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டியலின மாணவர்களுக்கு வழங்க வேண்டிய உதவித்தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் எனவும் வருகிற 30ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் நடைபெறவிருக்கும் ஆதிதிராவிடர் நல மானிய கோரிக்கையில் இப்பிரச்சினைகள் குறித்து தமிழக அரசும், எதிர்க்கட்சியினரும் விவாதிக்க வேண்டும் எனவும் கூறினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>