உச்ச நீதிமன்ற இறுதி உத்தரவும் நிராகரிப்பு கர்நாடகா சீராய்வு மனு

இனியும் உத்தரவுகளை மதிக்காமல் கூட்டாட்சி தத்துவத்தை ஏற்க மறுத்தால் நல்லதல்ல; கோர்ட் சும்மா இருக்காது என்றும் நீதிபதிகள் கண்டித்தனர். ஆனால், நேற்று பெங்களூருவில் கூடிய அனைத்து கட்சி கூட்டத்தில், காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டாம்; நாங்கள் சிறை செல்ல தயார் என்று பல தலைவர்களும் கூறியதால் சர்ச்சை வெடித்தது. தண்ணீர் திறக்க முடியாது என்று மீண்டும் தீர்மானம் போடப்பட்டது.

இனியும் உத்தரவுகளை மதிக்காமல் கூட்டாட்சி தத்துவத்தை ஏற்க மறுத்தால் நல்லதல்ல; கோர்ட் சும்மா இருக்காது என்றும் நீதிபதிகள் கண்டித்தனர். ஆனால், நேற்று பெங்களூருவில் கூடிய அனைத்து கட்சி கூட்டத்தில், காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டாம்; நாங்கள் சிறை செல்ல தயார் என்று பல தலைவர்களும் கூறியதால் சர்ச்சை வெடித்தது. தண்ணீர் திறக்க முடியாது என்று மீண்டும் தீர்மானம் போடப்பட்டது.

புதுடெல்லி: தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று செப்டம்பர் 20 மற்றும் 30ம் தேதிகளில் உச்ச நீதிமன்றம் போட்ட உத்தரவுகளை மறு பரிசீலனை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடக அரசு, தமிழகத்துக்கு தண்ணீர் தர தொடர்ந்து மறுப்பதும், இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல் செய்து உத்தரவு பெறுவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. இதனால், டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பா பருவத்திற்காக தண்ணீரைத் திறந்துவிடக்கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் கடந்த 5ம் தேதி, 12ம் தேதி, 20ம் தேதி தமிழகத்துக்கு தண்ணீர் தரும் வகையில் பல உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.

இந்நிலையில் கடந்த 30ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள், கர்நாடக அரசைக் கண்டித்ததுடன் 3 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடிவீதம் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை 4 நாட்களுக்குள் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு ஒரு சீராய்வு மனுவை நேற்று தாக்கல் செய்தது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கர்நாடகாவில் உள்ள அணைகளில் உள்ள தண்ணீர் கர்நாடக மாநிலத்தின் குடிநீர் தேவைக்கே பற்றாக்குறையாக உள்ளது. அணைகளுக்கு நீர் வரத்தும் குறைந்துள்ளது. இந்நிலையில், தமிழத்துக்கு தண்ணீர் தருவது இயலாத காரியம். எனவே, தமிழகத்துக்கு தினமும் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் 20ம் தேதி மற்றும் 30ம் தேதி உத்தரவுகளை மறு பரிசீலனை செய்து உத்தரவிட வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வழக்கு 3 நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் நிலுவையில் உள்ளது. மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை நீதிமன்ற உத்தரவினால் அமைக்க முடியாது. அதற்காக தனியாக சட்டம் கொண்டு வந்துதான் அமைக்க முடியும். எனவே, இந்த உத்தரவுகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும் இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு பிரதான வழக்குடன் அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது. காவிரி பிரச்னையில் கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்றுமுன்தினம் இறுதி எச்சரிக்கை விடுத்தது. இனியும் உத்தரவுகளை மதிக்காமல் கூட்டாட்சி தத்துவத்தை ஏற்க மறுத்தால் நல்லதல்ல; கோர்ட் சும்மா இருக்காது என்றும் நீதிபதிகள் கண்டித்தனர். ஆனால், நேற்று பெங்களூருவில் கூடிய அனைத்து கட்சி கூட்டத்தில், காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டாம்; நாங்கள் சிறை செல்ல தயார் என்று பல தலைவர்களும் கூறியதால் சர்ச்சை வெடித்தது. தண்ணீர் திறக்க முடியாது என்று மீண்டும் தீர்மானம் போடப்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் தமிழக பிரதிநிதி சுப்பிரமணியன்
* காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க பிரதமர் மோடி நேற்றுமுன்தினம் ஆலோசனை நடத்தினார்.
* சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி, வாரியத்தின் பிரதிநிதிகளின் பெயர்களை தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் அக். 1ம் தேதி மாலை 4 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
* இதன்படி, தமிழக அரசு சார்பில் மேலாண்மை வாரியத்தின் பிரதிநிதியாக காவிரி தொழில்நுட்பப் பிரிவு தலைவர் சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>