உச்ச நீதிமன்றம் ஆலோசனையை தொடர்ந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடகா முடிவு

 தமிழகத்துக்கு கட்டாயம் காவிரியிலிருந்து  தண்ணீர்  திறக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிடும் நிலை ஏற்பட்டால், இதை  சமாளிக்க கர்நாடக விவசாயிகளின் பயன்பாட்டுக்காக ஏரிகளில் தண்ணீர்  நிரப்புவதை கர்நாடக அரசு தற்காலிகமாக தள்ளிவைக்கவேண்டும் என வழக்கறிஞர் பாலி நாரிமன்

தமிழகத்துக்கு கட்டாயம் காவிரியிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிடும் நிலை ஏற்பட்டால், இதை சமாளிக்க கர்நாடக விவசாயிகளின் பயன்பாட்டுக்காக ஏரிகளில் தண்ணீர் நிரப்புவதை கர்நாடக அரசு தற்காலிகமாக தள்ளிவைக்கவேண்டும் என வழக்கறிஞர் பாலி நாரிமன்

பெங்களூரு: காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையை தொடர்ந்து, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகா முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக சட்ட நிபுணர்களுடன் முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்தி வருகிறார். காவிரியிலிருந்து தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரணைக்கேற்ற உச்ச நீதிமன்றம், ‘வாழு, வாழவிடு’ என்ற தத்துவத்தை கடைபிடிக்கவேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.

இதனிடையே முதல்வர் சித்தராமையா கர்நாடகாவை சேர்ந்த உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமனை நேற்று டெல்லியில் நேரில் சந்தித்தார். அப்போது, நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல், சட்ட ஆலோசகர் பிரஜீத் ஹாலப்பா, மூத்த வழக்கறிஞர்களான மோகன்காதகரி ஆகியோருடன் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆலோசனை நடத்தினார். காவிரியிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்ற தமிழக மனுவுக்கு பதில் அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.

மேலும், தமிழகத்துக்கு கட்டாயம் காவிரியிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிடும் நிலை ஏற்பட்டால், இதை சமாளிக்க கர்நாடக விவசாயிகளின் பயன்பாட்டுக்காக ஏரிகளில் தண்ணீர் நிரப்புவதை கர்நாடக அரசு தற்காலிகமாக தள்ளிவைக்கவேண்டும் என வழக்கறிஞர் பாலி நாரிமன் மற்றும் சட்ட ஆலோசகர்கள் முதல்வர் சித்தராமையாவுக்கு ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>