உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது: சித்தராமையா

: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது என வட கர்நாடகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட பின் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது என வட கர்நாடகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட பின் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பெங்களூரு: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது என வட கர்நாடகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட பின் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் உத்தரவை முழுமையாக படித்த பின் விரிவான பதில் தரப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். அதேபோல் சட்டநிபுணர்களுடன் கலந்து ஆலோசித்த பின் தண்ணீர் திறந்து விடுவது பற்றி முடிவு எடுக்கப்படும் என பீதரில் செய்தியாளரிடம் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா தகவல் தெரிவித்துள்ளார்.

காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதில்லை என்ற பிடிவாதத்தில் இருந்த கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் நாளை முதல் 3 நாட்களுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டது. இந்த தீர்ப்பால் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

மண்டியாவில் விவசாயிகள் போராட்டம்

காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடக விவசாயிகள் மண்டியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் போராட்டத்தால் மைசூரு, பெங்களூரு இடையே வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>