ஈரோடு மாவட்டத்தில் 700 ஆண்டுகளாக பாரம்பரியமாக நடந்து வரும் குதிரை திருவிழா

புதுப்பாளையத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் குருநாதசுவாமி கோவில் பண்டிகையில் கால்நடை திருவிழா பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. 700 ஆண்டு பழைமை வாய்ந்த இந்த குருநாத சுவாமி கோவிலில் திப்புசுல்தான் காலத்தில் இருந்தே இங்கு குதிரை சந்தை மிகவும் பிரசித்தி பெற்று

புதுப்பாளையத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் குருநாதசுவாமி கோவில் பண்டிகையில் கால்நடை திருவிழா பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. 700 ஆண்டு பழைமை வாய்ந்த இந்த குருநாத சுவாமி கோவிலில் திப்புசுல்தான் காலத்தில் இருந்தே இங்கு குதிரை சந்தை மிகவும் பிரசித்தி பெற்று

புதுப்பாளையம்: ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்துள்ள புதுப்பாளையத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் குருநாதசுவாமி கோவில் பண்டிகையில் கால்நடை திருவிழா பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. 700 ஆண்டு பழைமை வாய்ந்த இந்த குருநாத சுவாமி கோவிலில் திப்புசுல்தான் காலத்தில் இருந்தே இங்கு குதிரை சந்தை மிகவும் பிரசித்தி பெற்று நடைபெற்று வருகிறது.

திப்புசுல்தான் அந்தியூர் பகுதியை தேர்வு செய்து இங்கு குதிரை படை களத்தை தொடங்கினார். இந்த பகுதி குதிரைகளுக்கு பயிற்சி அளிக்கக்கூடிய ஒரு படை தலமாகவும் அவர் பயன்படுத்தியுள்ளார். அந்த காலத்தில் போருக்கு செல்லக்கூடிய வகையில் குதிரைகளை தயார் படுத்துவதற்கு இந்த பகுதியை அவர் தேர்வு செய்திருந்த போது, இது போன்ற குதிரைகளை விற்பனை செய்வதற்கும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் இங்கு வந்துள்ளனர்.

காலப்போக்கில் அங்கு வரும் வியாபாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து, அது ஒரு திருவிழாவாகவே மாறியுள்ளது. ஆண்டுக்கு நான்கு நாட்கள் ஆயிரக்கணக்கான குதிரைகள் கொண்டுவரப்பட்டு திருவிழாவாகவே நடத்தப்பட்டு வருகிறது. அது தான் இந்த குதிரைகள் திருவிழா. காத்தியவாரி, மார்வாரி, நாட்டு குதிரை, இங்கிலிஷ் ப்ரீடு உள்பட 6000க்கும் மேற்பட்ட குதிரைகள், சந்தையில் அணிவகுத்து நிற்கவைக்கப்படுகின்றன. குறைந்தபட்சம் ரூ.5000ல் அதிகபட்சம் ரூ.20,00,000 லட்சம் வரை இங்கு குதிரைகள் விற்கப்படுகின்றன.

ஒரு காலத்தில் குதிரை வண்டியில் பயணிப்பது கவுரவமாக கருதப்பட்டது. ஆனால் தற்போது குதிரைகளையும், குதிரை வண்டிகளையும் பார்ப்பது அரிதாகிவிட்டது. ரேக்ளா, ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததால் காலை மாடு வளர்ப்பு குறைந்துவிட்டது. அதே போல் குதிரை பந்தயத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் குதிரை வளர்ப்பும் பெரும் அளவு குறைந்துவிட்டது. மத்திய அரசும், மாநில அரசும் இதற்கு தக்க நடவடிக்கை எடுத்து தமிழ்நாட்டு கலாச்சாரத்தை அழியாமல் பேணி பாதுகாக்க வேண்டும் என அங்கு வரும் பார்வையாளர்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>